உரை : இயற்சொல்லும் திரிசொல்லும் திசைச்சொல்லும் வடசொல்லும் என நான்கும் செய்யுள் செய்தற்குரிய சொல்லாதல் உடையஎன்றவாறு. இயற்சொல் என்பது தமிழ் வழங்கு நாட்டு விகாரம் இன்றித் தமிழ்இயற்கை யிலக்கணப்பாடு செவ்வனுடைய சொல்; அவை 1முன்னர் உணர்த்துப. திரிசொல் என்பது செய்யுளின்பம் நோக்கி அவ்வியற் சொற்களை அவ்வாய்பாடு திரித்து வேறுவாய்பாட்ட வாக்குஞ் செய்யுளுடைய சொல். என்னை? ‘ 2சேரிச் சொல்லின் முட்டுற லஞ்சிச் செய்யுட்குப் புலவர் செய்துகொண் டன்றே’ என்பது 3புறச்சூத்திரம். 4அவைதாம் வழக்கினுள் இன்மை காரணம் அமைதல் என்பவாகலின்; அவையும் 5முன்னர் உணர்த்துப. திசைச்சொல்என்பது செந்தமிழ் நாட்டை 6அடையும் புடையும் கிடந்த திசை நாட்டார் வழங்குஞ்சொல்; அவையும் 7முன்னர் உணர்த்துப.
1. எச்சவியல் சூத்திரம் 2 ல் 2. சேரிவழக்குச் சொற்போலச் சில சொற்கள் செய்யுளில் முட்டுப்படுதற்கு அஞ்சி அவை இயற்சொல்லாயினும் புலவரால் திரித்துக் கொள்ளப்பட்டன. 3. பரிமாணச் சூத்திரம்-பாடம். 4. அத்திரி சொற்கள் வழக்கில் இல்லாமையால் செய்யுளில் அமைக என்ப. 5. முன்னர். சூ 3-ல் 6. அடையும் புடையும் கிடந்த திசை = செந்தமிழ் நாட்டை அடைந்தும் அடைந்தவற்றைச் சூழ்ந்தும் கிடந்ததிசை. அடைந்து கிடந்தன தென்பாண்டி குட்டம் முதலிய பன்னிருநாடுகள். புடைக்கிடந்தன சிங்களம் சோனகம் சாவகம் முதலிய நாடுகள். 7. முன்னர். சூ. 4-ல். |