பக்கம் எண் :

314தொல்காப்பியம்-உரைவளம்

ஆதி

அவையில் சொல்லத் தகாத சொற்களை மறைத்துப் பேசுக. அல்கிளவி-தகுதியல்லாத சொல்.

கால்கழுவி வந்தான்-கழுவியது எதனை? (ப, பா, பிக்கு அடுத்ததை)

தலையில்லாக் கமலம்-கமலத்தின் முதலெழுத்தில்லாதது.

மேலதன் புறனடை

437 மறைக்குங் காலை மரீஇய தொரால்       (47)
  
 (மறைக்கும் காலை மரீஇயது ஒரால்)

ஆ. மொ. இல.

When speaking in hidden form, the deformed
Word which coming down through
Generations is not to be prohibited.

இளம்

இச்சூத்திரம் என்னுதலிற்றோவெனின் இறந்தது காத்தது.

உரை : மேல் அவைக்குரிய வல்லனவற்றை மறைத்தே, சொல்லுக என்றார், இனி அவைதாம் மரீ இயடிப்பட்ட வழியாயக் கால்மறைக்க வேண்டுவதன்று; அவை யொழித்து ஒழிந்தன மறைத்தே சொல்லுக என்றது என்பது.

இனி, அவ்வாறு மரீஇ வந்தன; ஆட்டுப் பிழுக்கை ஆப்பீ எனவரும்.

சேனா

இ-ள் : அவையல் கிளவியை மறைத்துச் சொல்லுங்கால் மேற்றொட்டு வழங்கப்பட்டு வருவன மறைக்கப்படா, எ-று.

உ-ம் : ஆப்பீ, ஆனையிலண்டம் என மரீஇ வந்தன மறைக்கப்படாது வந்தவாறு.