பக்கம் எண் :

மேலதன் புறனடை சூ. 47315

1பகல்கான் றெழுதரும் பல்கதிர்ப்பரிதி (பெரும்பாண் 2) என்புழிக் ‘கான்று’ என்பது தன் பொருள்மேல் நில்லாது அணி குறித்துப் பிறிதோர் பொருள்மேல் நிற்றலின் மரீஇய சொல்லாய் மறைக்கப்படாமையும், அதன் பொருள்மேல் நின்றவழி மறைக்கப்படுதலும் அறிக.

தெய்

மேலதற்கு ஓர்புறனடையுணர்த்துதல் நுதலிற்று.

இ-ள் : அவைக்களத்து அல்லாத சொற்களை மறைத்துச் சொல்லுங்கால் அவ்வக்காலத்து மருவிப் போந்த சொற்களை மறைத்தொழிக, எ-று.

உ-ம் : மருவிப்போந்தன :- ஆப்பி, கோமூத்திரம் என்றாற் போல்வன.

நச்

இது மேலதற்கு ஓர் புறனடை.

இ-ள் : மறைக்குங் காலை-அவ்வவையல் கிளவியை மதை்துக் கூறுங்கால், மரீஇயது ஒராஅல்-மேல் தொட்டு மரீஇ வழங்கியதனை மறைத்தலை நீக்குக, எ-று.

உ-ம் :‘மெழுகும் ஆப்பி கண்கலுழ் நீரானே       (புறம். 249)
 ‘ஆப்பி நீர் எங்குந் தெளித்துச் சிறுகாலை’
யானை இலண்டம்
யாட்டுப் பிழுக்கை

எனவரும். தன் பொருள்மேல் நில்லாது அணிகுறித்து நின்ற ‘பகல்கான் றெழுதரும் பல்கதிர்ப் பரிதி’ (பெரும்பாண். 2) என்றாற்போல்வன தம் பொருளை யுணர்த்துங்கால் மறைத்துக் கூறப்படுமாறு உணர்க.


1. ‘கான்று’ எப்து ‘கக்கி’ என்னும் பொருளது. இங்கு அப்பொருள் இல்லை, ‘வெளிப்படுத்தி’ என்னும் பொருள் உண்டு. அணி-‘சமாதி’ என்னும் குண அணி.