பக்கம் எண் :

316தொல்காப்பியம்-உரைவளம்

வெள்

இது மேலதற்கோர் புறனடை.

இ-ள் : அவையல் ‘கிளவியை மறைத்துச் சொல்லுங்கால் தொன்றுதொட்டு மருவி வழங்கியதனை மறைத்தலை நீக்குக, எ-று.

உ-ம் : ‘மெழுகும் ஆப்பி கண்கலுழ் நீரானே’, ஆப்பி நீர் எங்குந் தெளித்துச் சிறுகாலை’ யானையிலண்டம்’, ‘யாட்டுப் பிழுக்கை’ என வரும்.

ஆதி

அவையல் கிளவியை மறைத்துச் சொல்லும் முறையில் வாலாயமாக வரும் முறையை நீக்க வேண்டாம்.

சிறுநீர்கழிக்க - கொல்லைக்கு - வெளிக்கு என்ற வழக்க முறையைக் கைவிடலாகாது.

இரப்புச் சொற்கள்

438.ஈதா கொடுவெனக் கிளக்கு மூன்று
 மிரவின் கிளவி *யாகிட னுடைத்தே       (48)
  
 (ஈ தாகொடு எனக் கிளக்கும் மூன்றும்
இரவின் கிளவி ஆகு இடன் உடைத்தே)

ஆ. மொ. இல.

‘I’ ‘tha’ and ‘Kodu’ - these threeare used
words of begging.

பி. இ. நூ.

நன். 407 (சூ. 451-ல் காண்க)


‡ இதுமுதல் நான்கு சூத்திரங்களையும் ஒரே சூத்திரமாகக் கொள்வர்

தெய்வச்சிலையார்.

* ‘ஆகிடனுடைய’ என்பது இளம்பூரணரை யொழிந்த பிறர் பாடம்.