முன்னிலைச் சொல்லாய் வருவழியல்லது பிறாண்டு இன்ன சொல் இன்னார்க் குரித்தென்னும் வரையறையில் என்பது உணர்த்துதற்க்கு ஈ, தா, கொடுவென 5முன்னிலை வாய்பாடுபற்றி யோதினார். தெய் (இது முதல் நான்கு சூத்திரங்களையும் ஒரே சூத்திரமாகக் கொண்டு உரை யெழுதினார்; ஆகலின் இவற்றின் உரைகளை ‘கொடுவென்கிளவி’ என்னும் சூத்திரத்திற் காண்க) நச் இஃது ஒரு பொருள்மேல் வரும் ஈ, தா, கொடு என்னும் பல சொற்கு மரபு வேறுபாடு கூறுகின்றது. இ-ள் : ஈதா கொடு எனக் கிளக்கும் மூன்றும்-ஈதா கொடு என்றுமுன்னின்றானை நோக்கிக் கூறும் சொற்கள் மூன்றும், இரவின் கிளவி ஆகு இடன் உடைய-ஒருவன் ஒன்றை இரத்தற்கண் வரும் சொல்லாம் இடம் உடைய, எ-று. ஈச்சிறகு எனவும், ((நாலடி. 41) தாவில் நன்பொன் (அகம் 212) எனவும், கொடுங்கோல் (சிறப். 23: 111) எனவும் இவை பிறபொருளையும் உணர்த்துதலின் ‘ஆகிடன் உடைய’ என்றார். இவை மூன்றும் 1‘இல்’ என இரப்போர்க்கும், ‘இடன்’ இன்றி யிரப்போர்க்கும், தொலைவாகி யிரப்போர்க்கும் உரிய என்றுணர்க.
5. முன்னிலை வாய்பாடு-ஈவாய் என்னும் பொருளில் ‘ஈ’ எனநிற்றல் தருவாய், கொடுப்பாய் என்னும் பொருளில் தா, கொடு எனநிற்றல். 1. இல் என இரப்போர்-வறுமையால் இரப்போர். இடன் இன்றியிரப் போர் - செல்வம் சுருங்கிய காலத்து இரப்போர். தொலைவாகி யிரப்போர்-இருந்த பொருள் தொலைந்ததாக இரப்போர். |