பக்கம் எண் :

இரப்புச் சொற்கள் சூ. 48319

வெள்

இஃது இரவின் கிளவியாவன இவையெனக் கூறுகின்றது.

இ-ள் : ஈதா கொடு எனச் சொல்லப்படும் மூன்றும் ஒன்றை யிரத்தற்கண் வரும் சொல்லாகும் இடம் உடைய, எ-று.

இவை இரத்தற் பொருளில் மட்டுமன்றி ஈச்சிறகு, கொடுங்கோல், தாவில் நன்பொன் எனப் பிறபொருள் மேலும் வருதலுடைமையால் ‘இரவின் கிளவியாகிடனுடைய’ என்றார்.

ஆதி

ஈ தா கொடு என்னும் மூன்று சொற்களும் ஒன்றை வேண்டி நிற்கும் சொல்லாக இடம் பெறுகின்றன.

ஈ என்பது வழங்கும் மரபு

439. அவற்று
 ளீயென் கிளவி யிழிந்தோன் கூற்றே       (49)
  
 (அவற்றுள்
ஈ என் கிளவி இழிந்தோன் கூற்றே.)

ஆ. மொ. இல.

Of them,
the word ‘I’ is used by an inferior.

பி. இ. நூ.

நன். 407

ஈ................இழிந்தோன்................இரப்புரை

முத்து ஓ. 110.

அவற்றுள்
ஈ என் கிளவி இழிந்தோன் இரப்புரை