ஈ என்பது வழங்கும் மரபு சூ. 49 | 321 |
‘இவற்கீத் துண்மதி கள்ளே’ (புறம். 290) என்புழியும் ‘இவன்’ என்பது முன்னிலையும் படர்க்கையும் என்றுணர்க. வெள் (‘கொடு வென் கிளவி’ என்னும் சூத்திரத்திற்காண்க) ஆதி ஈ என்னும் சொல் இழிந்தவன் உயர்ந்தவனை வேண்டிக் கூறும் சொல். இது வேண்டல். ஐயனே ! எனக்கு ஈத்தருள்! தா என்பது வழங்குமாறு 440. | தாவென் கிளவி யொப்போன் கூற்றே (50) | | | | (தாஎன் கிளவி ஒப்போன் கூற்றே) |
ஆ. மொ. இல. The word ‘tha’ is the expression of an equal. பி. இ. நூ. நன். 467 தா ................... ஒப்போன் ............................இரப்புரை முத்து. ஒ. 111 தாவென் கிளவி சமானன் மேற்றே இளம் இச்சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், இரக்கப்படுவானை ஒப்பான் இரக்குங்கால் தா என்னும் சொற் சொல்லி இரக்கும் என்பது உணர்த்தியவாறு. வ-று : சோறுதா, ஆடைதா எனவரும். சேனா (கொடுவென் கிளவி என்பதில் உரை காண்க) |