தெய் (கொடுவென் கிளவி என்பதில் உரை காண்க) நச் இஃது இரண்டாவதன் மரபு கூறுகிறது. இ-ள் : தாஎன் கிளவி-தன்மை முன்னிலைக்கு உரிய ‘தா’ என்னும் சொல், ஒப்போன் கூற்று-இரக்கப்படுவானோடு ஒக்கும் இரவலன் அவனை இரக்குங்கால் கூறும் கூற்றாம், எ-று. உ-ம் : | ‘எனக்குச் சோறுதா’ எனவரும் | | ‘மாணலந் தாவென வருந்தற் கண்ணும்’ எனவும், ‘என்னலந் தாராய்’ (கலி 128) |
எனவும் 1’கொடு’ போலவருவன கொடுப்பான் பொருளாய்க் கொள்வான் கண் செல்லாதனவற்றை இரந்தனவாம். ‘ஒப்போன் கூற்று’ என்றாரேனும் சிறுபான்மை வலியாற் கொள்ளுமிடத்தும் ‘தா’ என்பது வரும் எனக்கொள்க. 2“நின்னது தாவென நிலைதளரக் குரங்கன்னபுன் குறுங் கூளியர் பரந்தலைக்கும் பகையொன் றென்கோ” (புறம். 136) எனவரும். வெள் (‘கொடுவென் கிளவி’ என்பதில் உரை காண்க)
1. ‘கொடு’ போல வருவன-கொடு என்னும் பொருள் போல வருவன. நலம் என்பது கொடுக்கப்படுவதும் கொள்ளப்படுவதும் இல்லை; அதனால் கொடுப்போன் பொருளாய்க் கொள்வான் மேற்செல்லாதாயிற்று. 2. பொருள் : வழிச்செல்வோர் வைத்திருக்கும் பொருளைத் திடீரென வந்து பறிக்கும் குரங்கு போலும் சிறிய வழிப்பறி செய்யும் கள்வர் வந்து நின்னிடத்துள்ளதைத் தா என மனநிலை தளரப் பரந்து அலைக்கும் பகை ஒன்று என்பேனோ. |