கொடு என்பது வழங்குமாறு சூ. 51 | 325 |
உ-ம் : சோறு ஈ, ஆடைதா, சாந்து கொடு என மூன்று சொல்லும் முறையே இழிந்தோர், ஒப்போர், உயர்ந்தோர் ஆகிய மூவர்க்கும் உரியவாய் வந்தவாறு காண்க. ஆதி கொடு என்னுஞ் சொல் உயர்ந்தோன் இழிந்தோனிடம் சொல்லும் சொல்-இது கட்டளை. பையா, அதனை என்னிடம் கொடு. கொடு என்பதன் புறனடை 442. | கொடுவென் கிளவி படர்க்கை யாயினுந் | | தன்னைப் பிறன்போற் கூறுங் குறிப்பின் றன்னிடத் தியலு மென்மனார் புலவர். (52) | | | | கொடு என் கிளவி படர்க்கை ஆயினும் தன்னைப் பிறன்போல் கூறும் குறிப்பின் தன் இடத்து இயலும் என்மனார் புலவர்) |
ஆ. மொ. இல. Though the word ‘kodu’ belongs to the third person. it belongs to the first person when the receiver speaks of himself in the third person. இளம் இச்சூத்திரம் என்னுதலிற்றோவெனின், மேற் சூத்திரத்திற்குப் புறனடையாமாறு உணர்த்துதல் நுதலிற்று. உரை : கொடு என்றது தன்மைக்கு ஏற்ற தன்று: படர்க்கைக்கு உரியதோர் சொல்லாயிற்று: உயர்ந்தோன் இழிந்தோனை யிரக்குங்கால் 1தமன் ஒருவனைக் காட்டி, இவற்குக்
1. தன்னைக்காட்டி இவற்குக் கொடு என்னாமல் தன்னைச் சார்ந்தவன் ஒருவனைக் காட்டி இவற்குக் கொடு என்னும். இங்குத் தமன் ஒருவனைக் காட்டியது தன்னைக் காட்டியதாகவே ஆகும். தனக்குக்கொடு-இவற்றைக்கொடு. இதற்குச் சேனாவரையர் மறுப்புக் காண்க. |