கொடு என்பதன் புறனடை சூ. 52 | 327 |
2உயர்ந்தான் தான்ஒருவனைக் காட்டி ‘இவற்குக் கொடு என்னும்’ என்றாரால் உரையாசிரியர் எனின், ஆண்டுப் படர்க்கைச்சொல் படர்க்கைச் சொல்லோடு இயைதலான் வழுவின்மையின் அமைக்கல் வேண்டாவாம்; அதனான் அது போலியுரை யென்க. தெய் மேலதற்கோர் வழுவமைதியுணர்த்துதல் நுதலிற்று. இ-ள் : மேற் சொல்லப்பட்டவற்றுள், கொடு என்னும் சொல் படர்க்கையாயினும், தன்னைப்பிறன் போற் கூறும் குறிப்பினாற்றன்னிடத்தியலும் என்று சொல்லுவர் புலவர், எ-று. தன்னைப் பிறன்போற் கூறுதலின் குறிப்பு எச்சம் ஆயிற்று. இச்சூத்திரத்தானும் குறிப்பெச்சம் அதிகாரப்பட்டவாறு கண்டு கொள்க. நச் இது கொடு என்பதற்கு இடவழு அமைக்கின்றது. இ-ள் : தன்னைப் பிறன்போல் ஆயினும் கூறும் குறிப்பின் கொடு என் கிளவியும் - இரப்போர் பலரும் தம்மின் ஒருவனைக் காட்டி ‘இவற்குக் கொடு’ எனத் தம்மைப் பிறரைப் போலாயினும் கூறி இரக்குங் கருத்தினால் கூறப்படும் ‘கொடு’ என்னுஞ்சொல்லும், தன்னைப் பிறன்போலாயினும் கூறும்
2. மறுப்புப் பொருத்தமே. ஆனால் ‘இவற்குக்கொடு’ என்றதில் இவன் என்றது பிறன் ஒருவனையன்று தன்னையே யாம். தமன் ஒருவனைக் காட்டியது தன்னைச் சுட்டுதற்கேயாம். அதனால் தமன் ஒருவனைக் காட்டி ‘இவன்’ என்ற விடத்து ‘இவன்’ என்னும் சொல் படர்க்கைச் சொல்லாயினும் பொருளால் தன்மைச் சொல்லாதலின் வழுவாகி அமைந்தது என்னல் வேண்டும். இளம்பூரணர் “தன்னைப் பிறன்போற் கூறும் குறிப்பில் ‘தனக்குக் கொடு’ என்றது வாய்பாடு அன்றேனும் அது தனக்கோ சொல்லியதாயிற்று” என எழுதியதாலும் அறியலாம்-சிவ. |