பக்கம் எண் :

328தொல்காப்பியம்-உரைவளம்

குறிப்பின் படர்க்கைக் கிளவியும்-கூறுகின்றார் பலரும் தம்மைப் பிறரைப் போலாயினும் கூறும் கருத்தினால் கூறப்படும் படர்க்கைச் சொற்களும், தன்னிடத்தியலும் என்மனார் புலவர்-இவ்விரண்டும் தன்மையிடத்திற்குரியவாய் நடக்கும் என்று கூறுவர் புலவர், எ-று.

1உ-ம் : ‘இவற்கு ஊண்கொடு’ எனவரும்.

2அங்ஙனம் சொல்லுவானோ பெருஞ்சாத்தன் தந்தை, சொல்லப்படுவாளோ பெருஞ்சாத்தன் தாய்.

இந்நான்கு சூத்திரத்தானும் ஆண்பால் உரிமையால் கூறினாரேனும் அவை, முப்பாற்கும் உரித்தாமாறு மேலே உணர்க.

சேனாவரையர், ‘கொடு என்பது தானே தன்னைப்பிறன்போற் கூறும் குறிப்பினையும் உணர்த்தும்’ என்று, அதற்குச் ‘சாந்து கொடு’ என்பது உதாரணம் காட்டினாரால் எனின், ‘கொடு’ என்பது கொடுப்பதோர் பொருளை ஏற்றற்கு உரிய நான்கன் உருபு வந்தால் அதனை முடித்தற்கு வந்த சொல்லாதலின், அவற்கு இவற்கு உவற்கு என்னும் சொற்களை அவாய், அவற்றை முடித்தே நிற்றல் வேண்டும்; வேண்டவே, ‘அவற்குக் கொடு’ என்பது ஏனையிரண்டும் (கிளவி 30) என்புழிக் கூறியதாம். ‘எனக்குக் கொடு’ என்பது தன்னைப் பிறன்போற் கூறும் குறிப்பு இல்லாததாயிற்று. 1ஆதலால் தன்னைப் பிறன்போற் கூறும் குறிப்பிற்றாய் வழுவமைதியும் ஏற்று நிற்பது ‘இவற்குக் கொடு’ என்னும் உதாரணமே யாயிற்று என்க.


1. எனக்கு ஊண்கொடு என்பது பொருள்.

2. அங்ஙனம் சொல்லுவேனோ பெருஞ்சாத்தன் தந்தையாகிய யான், சொல்லுவேனோ பெருஞ்சாத்தன் தாயாகிய யான் என்பது பொருள்.

1. தன்னைப்பிறன்போற் கூறும் குறிப்பிற்குச் ‘சாந்து கொடு’ என்னும் உதாரணம் பொருந்தாது; ‘இவற்குக் கொடு’ என்னும் உதாரணமே பொருந்தும் என்பது கருத்து. சேனாவரையர் உரையில் உதாரணம் மேற்காட்டப்பட்டது என்றிருப்பது ‘சாந்துகொடு’ என்றிருப்ப தைக்கும். ஆனால் அதையே இவற்குச் சாந்து கொடு என்று கொள்ளல் வேண்டும். அப்படியாயின இம்மறுப்பு வேண்டுவதன்று.