கொடு என்பதன் புறனடை சூ. 52 | 329 |
வெள் இது மேலதற்கோர் வழுவமைதி கூறுகின்றது. இ-ள் : கொடு வென்னுஞ்சொல் முதனிலை வகையாற் படர்க்கையாயினும் இரப்பான் தன்னைப் பிறன் ஒருவன்போலக் கூறுங்கருத்து வகையால் தன்னிடத்தே செல்லும், எ-று. ஆதி கொடு என்னும் சொல் படர்க்கையிடத்தது. ஆயினும் தன்னைப்பிறன்போல் பாவித்துக் கூறும் குறிப்பால் அது தன்மையிடத்ததாயும் வரலாகும். என்னிடம்தா, உன்னிடம் தந்தேன், அவனிடம் கொடுத்தேன் என்ற 1முறையில் கொடு படர்க்கைக்கு உரியது. ஆயின் தன்மையிடத்தான் 2அதனை இங்குக் கொடு’ என்னும் போது தன்னைப் படர்க்கையாக்குகிறான் வழுவமைதி அத்தகைய இடத்தும் அஃது தன்மையிடமே. சில சொற்களின் வழுவமைதி 443. | பெயர்நிலைக் கிளவியி னாஅ குநவுஞ் | | *சினைநிலைக் கிளவி யினாஅ குநவுந் தொன்னெறி மொழிவயி னாஅ குநவு மெய்ந்நிலை மயக்கி னாஅ குநவு மந்திரப் பொருள்வயி னாஅ குநவு மன்றி யனைத்துங் கடப்பா டிலவே (53) |
1. மூவிட வரிசைமுறையில். 2. அதனையிங்குக் கொடு-அதனை என்னிடம் கொடு இங்கு என்பது இவ்விடம். என்னும் பொருளுடையது. ‘இவன்’ என்னும் பொருளுடையதன்று. அதனால் ‘தன்னைப்பிறன் போற்கூறுதல்’ என்பதற்கு உயர்திணை வாய்பாட்டில் வைத்து ‘அதனை இவனிடம் கொடு’ என உதாரணம் காட்டுவதே நன்று. * இது இளம் பூரணர் பாடம் ‘திசைநிலைக்’ என்பது பிறர்பாடம். |