| (மெய்நிலைக் கிளவியின் ஆஅ குநவும் சினைநிலைக் கிளவியின் ஆஅ குநவும் தொல்நெறி மொழிவயின் ஆஅ குநவும் மெய்நிலை மயக்கின் ஆஅ குநவும் மந்திரப் பொருள்வயின் ஆஅ குநவும் அன்றி அனைத்தும் கடப்பாடு இலவே) |
ஆ. மொ. இல. A word naming something poletically. a dialectal word, a word long by established in usage, a word of hidden sense and a word used in a ‘manthiram’ (formula of prayar) are not bound by grammatical rules. பி. இ. நூ. இ. வி. 370 (தொல் சூத்திரமே) முத்து. ஒ. 115. ஒரு திணைப் பெயர்ஒரு திணைக்காய் வருநவும் திசைச்சொல் வாய்பாடு திரிந்து வருநவும் இயைபில் லனஇயைந் தனவாய் வருநவும் திணைமுத லாயின திரிந்து வருநவும் அன்றி அனைத்தும் கடப்பா டிலவே. இளம் இச்சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், ஒருசார் வழுக்காத்தல் நுதலிற்று. உரை : இவை மேற்கூறப்பட்ட இலக்கணத்தினை யன்றி யாகாமையின், எ-று. பெயர் நிலைக்கிளவி என்பது ஈண்டு உயர்திணைப் பெயரையாயிற்று. அவ்வுயர்திணைப் பெயர் உயர்திணைப் பெயர் மேல் வழங்கப்படுதலின்றியும் அமையும் என்றவாறு நம்பி என்னும் உயர்திணைப் பெயர் ஒரு யானை மேலானும் ஒரு கோழி மேலானும் பிறவற்றின் மேலானும் நிற்கும். நங்கை என்ப ஒரு கிளியையும் என்பது. |