பக்கம் எண் :

சில சொற்களி்ன் வழுவமைதி சூ. 53331

1இனிச் சினைநிலைக் கிளவியின் ஆவன கடப்பாடின்றி வருமாறு : ‘வெண் கொற்றப் படைத்தலைவன்’, ‘வெள்ளேறக்காவிதி’ என்பன.

2இவற்றை முன்னர்க் கிளவியாக்கத்துச் சிறப்புப்பெயர் நின்றவழி இயற்பெயர் வைத்துக் கூறுப என்றார்; இனிச்சினைச் சொற்கண் ஆயின் அது வேண்டுவதன்று என்பது கருத்து.

தொன்னெறி மொழிவயின் ஆஅகுநவும் என்பது, 3முற்றுச் சொல். அவற்றையும் இவ்வாறே சொல்லப்படுதலின் இப்பொருள என்றோர் கடப்பாடில என்றார்.


1, 2. வெள்ளேறக்காவிதி சிறப்புப் பெயர். படைஅரசற்கு அங்கமாதலின் படைத்தலைவன் சினைப்பெயர். வெண்கொற்றப் படைத்தலைவன் வெள்ளேறக்காவிதி என்பதில் சினைப்பெயர் முன்னரும் சிறப்புப் பெயர் பின்னரும் மயங்கி வந்தன. சிறப்புப் பெயர் முன்னரும் இயற்பெயர் பின்னரும் வருக என்பது கிளவியாக்கத்துட் கூறப்பட்டது. (சூ.) அதற்குமாறாகச் சினைப்பெயர் முன்னர் வந்தது. வெண்கொற்றப் படைத்தலைவன், வெள்ளேறக்காவிதி என்பன தனித்தனி உதாரணம் எனக் கொள்ளின் சினைப்பெயரும் சிறப்புப்பெயரும் காணாமை மயங்க நேரும். வெள்ளேறன் என்பது சினைப்பெயராயின் காவிதி என்னும் சிறப்புப் பெயர்க்கு முன்வந்தது எனக் கொள்ளலாம். வெண்கொற்றப் படைத்தலைவன் என்பதில் சினைப்பெயரும் சிறப்புப் பெயரும் தனித்தனிக் காண இயலவில்லை, சிவ.

3. முற்றுச்சொல்-முடிந்த முடிபுச் சொல், அதாவது முடிவான கருத்துடைச் சொல். கடன் எனவும், தாரான் எனவும் முடிபாகக் கூறப்பட்டமை காண்க. முற்றுச்சொல் என்பதற்குப் பதில் முதுசொல் என்றிருக்கலாம் என்பர் கு. சுந்தர மூர்த்தி. உதாரணம் இரண்டற்கும் நச்சினார்க்கினியர் விளக்கம் பார்க்க. எருமையீர்க்கும் கதை உரையிறுதியிற்காண்க.