பக்கம் எண் :

332தொல்காப்பியம்-உரைவளம்

வ-று : ‘ஆற்றுட் செத்த எருமை ஊர்க்குயவற் கிழுத்தல் கடன்’ எனவும், ‘யாட்டுளான் இன்னுரை தாரான்’ எனவும் வரும். பிறவும் அன்ன,

பெயர் நிலைமருங்கின் ஆ அகுநவும் என்பது, மேல் ‘தகுதியும்’ வழக்கும் தழீஇயின வொழுகும்’ (கிளவி. 17) என்புழி மங்கல மரபினானும் குழுவின் வந்த குறி நிலை வழக்கினானும் கூறப்படும் என்றாரன்றோ, இனி, அவை அவ்வாறன்றித் தத்தம் இலக்கணத்தானும் சொல்லப்படும் என்றவாறு.

வ-று : சுடுகாட்டை நன்காடு என்னாது சுடுகாடு என்றும், செத்தாரைத் துஞ்சினார் என்னாது செத்தார் என்றும் கூறவும் அமையும் என்ற வாறு.

இனி, மந்திரப் பொருள்வயின் ஆஅகுநவும் என்பது.

நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த
மறைமொழி தானே மந்திரம் என்ப      (செய்யு. 171)

அவை கூறப்பட்ட எழுவகை வழுவிற்றீர்ந்து வருக என்ற கடப்பாடில என்றவாறு. அவை,

4திரி திரி சுவாகா கன்று கொண்டு
கறவையும் வந்திக்க சுவாகா

என்றாற் போல வரும்.

இச்சூத்திரத்திற்குப் பிறிதும் ஓர் பொருள் உரைப்பாரும் உளர். 5இதுவும் மெய்யுரைபோலும் என்பது.


4. பொருள் : “கன்றைக்கொன்று மாட்டையும் பால் கறக்காமல் வற்றச் செய்க என மூன்று முறை சொல்லி சுவாகா எனப் பலியையும் நெருப்பில் இடுக”- கு. சுந்தர மூர்த்தி.

5. இதுவும் மெய்யுரையென்பது பொருள். போலும் என்பது ஒப்பில் போலி.