சில சொற்களி்ன் வழுவமைதி சூ. 53 | 333 |
சேனா இ-ள் : பெயர் நிலைக் கிளவியின் ஆஅகுநவும் என்றது, ஒரு திணைப்பெயர் ஒரு திணைக்காய் வருவனவும் என்றவாறு. அவையாவன : ஓர் எருத்தை நம்பி என்று வழங்குதலும் ஒரு கிளியை நங்கையென்று வழங்குதலுமாம். பிறவும் அன்ன. திசை நிலைக்கிளவியின் ஆஅகுநவும் என்றது, திசைச்சொல்லிடத்து வாய்பாடு திரிந்து வருவனவும் என்றவாறு. அவை புலியான் பூசையான் என்னுந் தொடக்கத்தன. தொன்னெறி மொழிவயின் ஆஅகுநவும் என்றது, முது சொல்லாகிய செய்யுள் வேறுபாட்டின் கண் இயைபில்லன இயைந்தனவாய் வருவனவும் என்றவாறு. அவை 1‘யாற்றுட் செத்த எருமை யீர்த்தல் ஊர்க்குயவர்க்குக் கடன், என்பது முதலாயின. மெய்ந்நிலை மயக்கின் ஆஅகுநவும் என்றது, பொருள் மயக்காகிய பிசிச் செய்யுட்கண் திணை முதலாயின திரிந்துவருவனவும் என்றவாறு, அவை, *எழுதுவரிக் கோலத்தார் ஈ வார்க் குரியார் தொழுதிமைக் கண்ணணைந்த தோட்டார்-முழுதகலா நாணிற் செறிந்தார் நலங்கிள்ளி நாடோறும் பேணற் கமைந்தார் பெரிது. என்பது புத்தகம் என்னும் பொருள்மேல் திணைதிரிந்து வந்தவாறு கண்டுகொள்க. பிறவும் அன்ன.
1. விளக்கம் நச்சர். உரையிற்காண்க. * பெண்ணுக்கும் புத்தகத்துக்கும் சிலேடை எழுதப்படும் தொய்யில் என்னும் வரிக்கோலமுடையவர். எழுதும் அழகிய வரிகளையுடையவர் மணம் செய்து கொடுக்கப்படுபவர்க்குரியர், கொடுக்கப்படும் மாணவர்க்குரியர்; தொகுதியாக மைபூசப்பட்ட கண்ணின்கடை சென்று சேர்ந்த காதின் தோடுடையவர், தன்னிடம் எழுத்துத் தெளிவாகத் தெரிய வேண்டிமை பூசப்பட்ட தொகுதியான ஓலைகளையுடையவர்; முழுதும் நீங்காத நாணத்தால் அடங்கியவர், முழுதும் நீங்காத கயிற்றுள் அடங்கியவர்; நலங்கிள்ளியால் நாடோறும் விரும்புதற்குரியர், நலங்கிள்ளியால் நாடோறும் பாதுகாத்தற்குரியர். |