பக்கம் எண் :

334தொல்காப்பியம்-உரைவளம்

மந்திரப் பொருள்வயின் ஆககுநவும் என்றது, மந்திரப் பொருட்கண் அப்பொருட்குரித்தல்லாச் சொல் வருவனவும் என்றவாறு இதற்குதாரணம் மந்திர நூல் வல்லார்வாய்க் கேட்டுணர்க.

அன்றியனைத்தும் கடப்பா டிலவே என்றது, அவ்வனைதும் வழங்கிய வாறே கொள்வதல்லது இலக்கணத்தான் யாப்புறவுடைய வல்ல என்றவாறு.

இஃது இச்சூத்திரத்திற்கு ஒருசாரார் உரை, ஒருசாரார் பிறவாறு உரைப்ப.

இஃது இயற் சொல்லும் திசைச்சொல்லும் பிறவும்பற்றி வழுவமைத்த தாகலின், கிளவியாக்கம் முதலாயினவற்றின் கண் உணர்த்துதற் கியைபின்மையான் ஈண்டு வைத்தார்.

தெய்

*அதிகார முறையான் இசையெச்சம் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

இ-ள் : பெயர்நிலைக் கிளவிகளின் ஆகுஞ்சொல்லும் திசை நிலைக் கிளவிகளின் ஆகுஞ்சொல்லும், பழமைத்தாகி நெறிப்பட வரும் சொல்லினாகும் சொல்லும். பொருள் நிலை மயக்கின் ஆகும் சொல்லும், மந்திரப் பொருள்வயின் ஆகும் சொல்லும் அவ்வனைத்தும் இச் சொற்குப் பொருள் இது என்னும் நியமம் இல, எ-று.

எனவே, தன்பொருள் ஒழியப் பிறிது பொருளும் படும் என்றவாறாம். ஒரு சொல் இரண்டு பொருள்பட நின்றவழி, ஒரு பொருளை யுணர்த்தும் இசை எஞ்சி நிற்கும் அன்றே அஃது இசையெச்சமாவது என்று கொள்க. அருஞ்சொல் என்றமையான் ஏற்பன கொள்ளப்படும்.

இசையெச்சம் ஐந்து வகையென்பது போந்தது. அவற்றுள் பெயர் நிலைக் கிளவியின் ஆகுவன : வேங்கை என்பது ஒரு மரத்திற்குப் பெயராயினும் புலிக்கும் பெயராயிற்று. அதுவு


* இக்கருத்து மற்றையோரினும் வேறுபட்டது.