சில சொற்களி்ன் வழுவமைதி சூ. 53 | 335 |
மறின்க் கைவேம் என்னும் பொருளும் பட்டது. இவ்வாறு ஒரு சொல்லினானே பிறிது பொருள் உணரின் அதை யுணர்த்தும் ஓசை எஞ்சி நின்ற தெனக் கொள்க. இது பல பொருள் ஒரு சொல் அன்றோவெனின் ஆம்; பல பொருட்கண் ஒரு சொல் வருதற்கு இலக்கணம் ஈண்டு உணர்த்துகின்றது. என்னை உணர்த்தியவாறு எனின், வேங்கை என்னும் சொல் புலிப்பொருண்மையுணர்த்திற்றாயின், மரம் பொருண்மையுணர்த்தும் சொல்யாது என ஒருகடாவரும். அக்கடா வேங்கை என்னும் சொல்லின் கண்ணே மரப்பொருண்மையை உணர்த்துவதோர் ஓசை எஞ்சி நின்ற தெனின் அல்லது விடை பெறாதாம். அதனானே இலக்கணம் உணர்த்தியவாறு அறிந்து கொள்க. திசை நிலைக் கிளவியின் ஆகுநவும் என்பது செந்தமிழ் நாட்டுவழங்கும் சொல் திசைச் சொல்லாகியவழிப் பொருள் வேறுபடுதல். கரை என்பது வரப்பிற்குப் பெயராயினும் 1கருநாடர்விளித்தற்கண் வழங்குப. ‘தொன்னெறி மொழு’ என்றதனான் முந்துற்ற வழக்காகித்தொடர்பு பட்டுச் செய்யுளகத்தினும் 2பரவைவழக்கினும் வரும் தொடர்மொழி என்று கொள்ளப்படும். ‘குன்றேறாமா’ என்றவழி குன்று, ஏறு, ஆ, மா, எனவும்படும்; குன்றின்கண் ஏறா நின்ற ஆமா எனவும் படும். இவ்வாறு வரும் பொருட்கெல்லாம் இத்தொடர் மொழி தானே சொல்லாகி இதன்கண் இசை வேறுபட்டுப் பொருள்வேறு உணர்த்தலின் அப்பொருண்மைகளை யுணர்த்தும் இசை எஞ்சி நின்றது. 3காதற் கொழுநனைப் பிரிந்தலர் எய்தா-மாதர்க் கொடுங்குழை மாதவி தன்னொடும்” இச்சொல்
1. கருநாடர்-கன்னடர். 2. பரவை வழக்கு-உலகவழக்கு. 3. மாதவிக் கொடிக்கும் மாதவிப் பெண்ணுக்கும் சிலேடைபற்றிப் படரும் விருப்பத்துக்குரிய கொழுகொம்பைப் பிரிந்து பூத்தல் இல்லாத அழகிய வளைந்த தளிர்களையுடைய மாதவிக் கொடி; காதற் கொழுநனாகிய கோவலனைப் பிரிந்தமையால் மகிழ்தல் இல்லாத அழகிய வளைந்த காதணியை யுடைய மாதவி. |