எல்லாம் குருக்கத்திக்கும் அடையாகி மாதவி என்னும் ஓர் பெண்பாற்கும் அடையாகிப் பொருள் வேறு படுதலின் இசையெச்சமாயிற்று. இது தனி மொழியாகிய பெயர்நிலைக் கிளவியின் அடங்காமையின் தொடர்மொழியென்று வேறு ஓதினார். மெய்ந்நிலை மயக்கமாவது பொருள்நிலைமயக்கம் கூறுதல். 4“குருகு கரு வுயிர்ப்ப ஒரு தன யோங்கிய திருமணிக் காஞ்சி” மணி. 18,55,56 என்றவழிக் குருகு என்பது மாதவி என்னும் கொடிக்கும் பெயராதலின், அப்பெயருடையதனைக் குருகு என்றார். காஞ்சி என்பது மேகலைக்குப் பெயராதலின், அது மணிக்காஞ்சி என்றொட்டி மணிமேகலை என்பாள் மேல் வந்தது. இவ்வாறு பொருள்நிலை மயங்க வருவனவும் இசையெச்சமாம் என்றவாறு. மந்திரம் என்பது பிறர் அறியாமல் தம்முள்ளார் அறிய மறைத்துக் கூறுஞ்சொல் அதன்கண் ஆகுவன : உலகினுள் வழங்குகின்ற பொருட்குத் தாம் அறிகுறியிட்டு ஆண்டுவரும் குழுவின் வந்த குறி நிலை வழக்கு. அது வெளிப்பட்ட சொல்லால் உணரும் பொருட்கு மறைத்துப் பெயரிடுதலும், எழுத்திற்குப் பிற பெயரிட்டு வழங்குதலும் என இருவகைப்படும். இவையும் பொருள் வேறு படுத்தி வழங்குதலின் இசையெச்சமாயின. அவற்றுள் பொருட்கு வேறு பெயரிட்டன; வண்ணக்கர் காணத்தை நீலம் என்றலும், யானைப்பாகர் ஆடையைக் காரை யென்றலும் முதலாயின. எழுத்திற்கு வேறு பெயரிட்டு வழங்குமாறு; மண்ணைச் சுமந்தவன் தானும் வரதராசன் மகன் தானும், எண்ணிய வரகாலி மூன்றும் இரண்டு மரமும் ஓர்யாறும், திண்ணம் அறிய வல்லார்க்குச்
4. பொருள் : மாதவி பெற்றெடுப்பச் சிறக்க வளர்ந்த மணிமேகலை. குருகு என்பது மாதவிக் கொடிக்கு ஒரு பெயர். குருகு என்பதால் மாதவிக் கொடியை நினைவுபடுத்திப் பின் மாதவி என்பவளையுணர்தினார். காஞ்சி என்பது மேகலை என்னும் பொருளது. காஞ்சி என்பதால் மேகலை என்னும் சொல்லைப் பெறவைத்து ‘மணிக்காஞ்சி’ என்பதால் ‘மணிமேகலை’ என்னும் பெயரைப் புலப்படவைத்தார். |