சில சொற்களி்ன் வழுவமைதி சூ. 53 | 337 |
சிவகதியைப் பெறலாமே” இதனுள் 1மண்ணைச் சுமந்தவன் - ந. வரதராசன்மகன் - ம. வரகாலி மூன்று - சி. இரண்டு மரம் - வா. ஓர்யாறு-ய. எனக்கூற நமச்சிவாய எனப் பொருளாயிற்று. பிறவும் அன்ன. நச் இதுவும் ஒருசார் வழுவமைக்கின்றது. இ-ள்: பெயர் நிலைக்கிளவியின் ஆஅகுநவும்-தத்தம் பொருள் உணர்த்தாது பெயர்ந்த நிலைமையையுடைய சொல்லான் வரும் செய்யுளும், திசைநிலைக் கிளவியின் ஆஅகுநவும்-திசையான் நிலைபெற்ற பெயரான் வரும் சொல்லும், மொழிவயின் தொன்னெறி ஆஅகுநவும்-சொல்லிடத்துப் பழைய நெறியான் ஆய்வரும் சொல்லும், மெய்ந்நிலை மயக்கின் ஆஅகுநவும்-ஒருமைப் பொருளால் கூறவே பன்மைப்பொருள் தோன்றி மயங்கும் மயக்கினான் ஆகும் செய்யுட்களும், மந்திரப்பொருள்வயின் ஆஅகுநவும்-மந்திரத்தையுடைய தெய்வங்களிடத்தே அம்மந்திரமாய் வரும் சொற்களும், அன்றி அனைத்தும்-ஆகிய அவ்வனைத்தும், கடப்பாடு இல-வழங்கியவாறே சொல்வது அல்லது இலக்கணத்தான் யாப்புறவு உடைய அல்ல, எ-று. உ-ம் : | “ஒள்வாள், கறையடியானைக் கல்ல | | துறைகழிப் பறியா வேலோன் ஊரே” (புறம். 323) |
என்புழி, 1‘வேலோன்’ என்பது ‘வேலையுடையோன்’ என்னும்
1. மண்ணைச் சுமந்தவன் சிவன் அவன் நந்தியெனவும் படுவான்....ந | வரதராசன் திருமால்; அவன்மகன் மன்மதன் ....ம | வரகாலி மூன்று-விளங்கவில்லை .....சி | இரண்டுமரம்-..................................? .....வா | ஓர்யாறு-யமுனை. ....ய |
1. வேலோன் என்பது, ‘வாளை உறையினின்றும் நீக்குதலறியாத’ என்றதால் காரணப்பெயராயில்லாமல் வாளா பெயராய் நின்றது தாமரையன்ன கண் என மென்மையும் அழகும் முதலிய பண்புபற்றிக் கூறியமையால் கொடுமைக்குரியவாள் உவமையாகக் கூறப்படாது. ஆதலின் வாட்கண் என்பது வாளா பெயராய் நின்றது. |