சில சொற்களி்ன் வழுவமைதி சூ. 53 | 339 |
வெள் இதுவும் ஒருசார் வழுவமைக்கின்றது. இ-ள் : ஒரு திணைப்பெயர் ஒரு திணைக்காய் வருவனவும், திசைச் சொல்லிடத்து வாய்பாடு திரிந்து வருவனவும், முதுசொல்லாகிய செய்யுள் வேறுபாட்டின் கண் இயைபில்லனஇயைந்தனவாய் வருவனவும், பொருள் மயக்கமாகிய பிசிச் செய்யுட் கண் திணைமுதலாவின திரிந்து வருவனவும், மந்திரப் பொருட்கண் அப்பொருட் குரித்தல்லாச் சொல் வருவனவும், அவ் வனைத்தும் வழங்கியவாறே கொள்வதல்லது இலக்கணத்தான் யாப்புறவுடைய வல்ல, எ-று. பெயர் நிலைக் கிளவியின் ஆகுந : ஓர் எருத்தை நம்பியென்றும் ஒரு கிளியை நங்கை யென்றும் வழங்குதலும் முதலியன. திசைநிலைக் கிளவியின் ஆகுந : புலியான், பூசையான் என்னுந் தொடக்கத்தன. தொன்னெறி மொழிவயின் ஆகுந : ‘யாற்றுட் செத்த எருமையீர்த்தல் ஊர்க்குயவர்க்குக் கடன்’ என்பது முதலாயின. மெய்ந்நிலை மயக்கின் ஆகுந : எழுதுவரிக் கோலத்தார் ஈவார்க் குரியார் தொழுதிமைக் கண்ணணைந்த தோட்டார் முழுதகலா நாணிற் செறிந்தார் நலங்கிள்ளி நாடோறும் பேணற் கமைந்தார் பெரிது. என்பது புத்தகம் என்னும் பொருள்மேல் திணை திரிந்து வந்த பிசி யென்னும் செய்யுள் என்பர் சேனாவரையர். மந்திரப் பொருள்வயின் ஆகுந என்பதற்குத் “திரிதிரி சுவாகா என்று கொண்டு கறவையும் வந்திக்க சுவாகா” என உதாரணம் காட்டுவார் இளம்பூரணர். |