பக்கம் எண் :

340தொல்காப்பியம்-உரைவளம்

ஆதி

பெயர்ச் சொல்லில் ஒன்றுக்கொன்று ஆகுவன, திசைச்சொல்லில் மாறுபடுவன, பழைய மரபில் மாறுபடுவன, பொருள் முறையில் மாறுபடுவன, மந்திர வகையில் மாறுபடுவன, இன்னும் இவை போன்றவையும் வரம்புள் நிற்பனவல்ல வழுவமைதியாக வருவனவாம்.

*குறிப்பு : ஆசிரியர் இச்சூத்திரத்தைத் தெளிவாக அமைத்தாரல்லர். உரையாசிரியர்கள் தம் திறன் எல்லாம் காட்டிக் கதை கற்பிக்கிறார்கள். யாமும் எமக்கு எட்டியவாறு கூறுகின்றோம்.

ஆகுநவும் - மாறுபாடு ஆகுநவும் என்ற பொருளில் வருகின்றது. அஃதே வழுவமைதி. முன்னர் (வேற். மய. 36ல்) ‘ஆகுபெயர்’ என்ற சொல் ஒன்று மற்றொன்றுக்கு ஆகுதலை அறிவிக்கின்றது. இங்கும் ஒன்று மற்றொன்றுக்கு ஆகுதல் என்றே பொருள் கொள்ள வேண்டியதாகிறது.

பெயர்ச்சொல்லில் ஆகுதல் : மனிதனைச் சிங்கம் வந்துவிட்டான் மாட்டை என் அம்மை வந்து விட்டாள், பையனை என் அம்மை எப்போது வந்தாய், பெண்ணை அரசே இங்குவா இம்முறையிற் பார்ப்பின் திணை வழு வமைதி பால்வழு வமைதிகளே பெயர் நிலைக் கிளவியின் ஆகுந.

திசைநிலைக் கிளவியின் ஆகுந; வடக்கிருந்தான், தென் புலத்தார் என உயிர் நீக்கும் வீரத்தாரையும், இறந்தாரையும் கூறும் முறைபற்றியோ-அல்லது திசைக்கு இடம் எனப்பொருள் கொண்டு இட ஆகு பெயரையோ அல்லது இடம்-தன்மை முன்னிலை படர்க்கை இடங்களாகக் கொண்டு இடவழுவமைதியென்றோ கொள்ளுதல் வேண்டும்.


* இவர் தம் போக்கில் கூறும் உதாரணங்கள் பற்றிய இலக்கணங்களை ஆசிரியர் கிளவியாக்கம் முதலியவற்றிற் கூறியுள்ளபடியால் இவர் கூறும் உரையும் உதாரணமும் ஏற்பதற்கில்லை.