சில சொற்களி்ன் வழுவமைதி சூ. 53 | 341 |
தொன்னெறி மரபின் ஆகுந : மரபு வழுவமைதி. வாழைத்தோட்டத்தைச் சிந்தாமணியார் ‘வாழைக்காடு’ என்பதும், புத்தகங்களில் மிளகுச்செடியை மிளகாய்ச்செடி என்பதும் மரபு வழுவமைதி. தாய் தன் மகனை ‘அம்மா’ என அழைப்பதும் தந்தை தன் மகனை அப்பா என அழைப்பதும் மரபு வழுவமைதியே. மெய்ந்நிலை மயக்கின் ஆகுந : மெய்ந்நிலை-உண்மைப் பொருள். அதன் மயக்கம் இடக்கரடக்கல் மங்கலம் குழூஉக்குறி ஆகிய தகுதி வழக்கும் ஆகுலாம். இன்றேல் முந்திய வழுவமைதியோடு பிணைத்து, மெய்ந்நிலை-கால நிலை எனக்கொண்டு கால வழுவமைதியெனக் கோடல் வேண்டும். மந்திரப் பொருள்வயின் ஆகுந : மந்திரம் என்பது மறைமொழி. தெய்வப்பெயர் மந்திர மொழிகளை இடம் மாறி உரைப்பது இங்கு உணர்த்தப்பட்டது போலும். ரிசபதேவர் சமணத்தெய்வ மந்திரம். சிவன் கோயிலில் கூறப்படும் முக்கண்ணன் சிவமந்திரம் விநாயகருக்கும் இற்றை நாளில் எத்தெய்வச்சிலை முன்னும் நின்று சாமியே சரணம் ஐயப்பா என்பதும், மயிலாப்பூர்க் கோயிலுள் நின்று ஒற்றியூருடைய கோவேயென்பதும் முறையே மந்திர வழுவமைதியாகலாம். அன்ன அனைத்தும்-வேறு குறிப்பாக இடம் மாறிப்பொருள் கூறல் : பையனைப் பார்த்து-பெரிய மனிதன் என்ன சொல்கிறாய்? தடித்தவனைப் பார்த்து என்ன இப்படி மெலிவு? இவ்வாறு ஒன்றுக்கொன்று வழுவமைதியாக வருவதும் முறையே. இதனைக் கட்டுப்படுத்த முடியாது. ஒரு கருத்து : முன் உரையாசிரியர் நம் கருத்துப் போல் கூறியுள்ளார்; யாம் வழுவமைதி முறைபற்றி இச்சூத்திரம் அமைத்ததாய்க் கொண்டு அதற்கேற்பக் கூறியுள்ளாம். |