செய்யாய் 444. | செய்யா யென்று முன்னிலை வினைச்சொல் | | செய்யென் கிளவி யாகிட னுடைத்தே (54) | | | | (செய்யாய் என்னும் முன்னிலை வினைச்சொல் செய்என் கிளவி ஆகுஇடன் உடைத்தே) |
ஆ.மொ. இல. ‘ Seyyay’ the verb of the second person may become ‘sey’ sometimes. பி. இ. நூ. இ. வி. 353.
முத்து. ஒ. 116 | | தொல். சூத்திரமே. |
பிரேயா. 46 செய்யாய் எனல் செய் எனக் குன்றுமே. இளம் இச்சூத்திரம் என்னுதலிற்றோவெனின், இது வினையியலுள் ஒழிந்து நின்ற ஒழிபு உணர்த்துதல் நுதலிற்று. 1உரை : ‘செய்யாய்’ என நின்ற முன்னிலை வினைச்சொல் ‘செய்’ என்னும் சொல்லும் ஆம்இடன் உடைத்து, எ-று.
1. “செய்யாய் என்னும் முன்னிலை எதிர் மறை வினைச்சொல் செய்வாய் என்னும் உடன்பாடு முன்னிலை. வினைச்சொல்லாகும் இடம் உண்டு” என்பது இவ்வுரையின் கருத்து. தெய்வச்சிலையார், நச்சினார்க்கினியர் கருத்தும் இதுவே. |