பக்கம் எண் :

செய்யாய் சூ. 54343

2இந்நாள் எம்மில்லத்து உண்ணாய் என்பது. அது செய்யாய் என்பது; அது செய் இனி என்றுமாம்.

சேனா

இ-ள் : செய்யாய் என்னும் வாய்பாட்டதாகிய முன்னிலை முற்றுச்சொல் ஆய் என்னும் ஈறுகெடச் செய் என்னும் சொல்லாய் நிற்றலுடைத்து, எ-று.

ஆகினுடைத்து என்றதனான் செய்யாய் என ஈறு கெடாது நிற்றவே பெரும்பான்மை யென்பதாம்.

உ-ம் : உண்ணாய், தின்னாய், கிடவாய், நடவாய் தாராய், வாராய், போவாய் என்பன ஈறுகெட உண், தின், கிட, நட, தா, வா, போ எனச் செய்யென் கிளவி யாயினவாறு கண்டு கொள்க.

1‘செய்யாய்’ என்னும் முன்னிலை எதிர்மறை ‘செய்’ என் கிளவியாதற்கு ஏலாமையான் செய்யாய் என்னும் முன்னிலை வினைச்சொல் என்றது விதி வினையையேயாம்.

2தன்னின முடித்தல் என்பதனான் வம்மின், தம்மின், என்பன மின்கெட வம், தம் என நிற்றலும் ; அழியலை,


2. உண்ணாய் என்னும் எதிர்மறை முன்னிலை வினைச்சொல் உண்ணதுவாய் என உடன்பாடு வினைச்சொல்லும் ஆம்.

1. செய்யாய் என்பது எதிர்மறை - அது எதிர்மறைபொருளிலேயே ‘செய்’ என வராது ; ஆதலின் செய்யாய் என்பது உடன்பாடு முன்னிலை வினைச்சொல்லே எனக்கொள்ளல் வேண்டும்.

2. வம்மின் தம்மின் என்பன முன்னிலை வினைச்சொல் ஆதலின் தம்மினம் ஆயின. புகழ்ந்தார் என்பது படர்க்கை வினைச்சொல் ஆதலின் அது புகழ்ந்திகுமல்லரோ என வருவது திரிபு என்பதில் ஒன்றாக அமைதலின் ஒன்றென முடிக்கப்பட்டது.