அலையலை என்னும் முன்னிலை யெதிர்மறை ஐகாரங்கெட்டு அழியல், அலையல் என நிற்றலும் கொள்க. ஒன்றென முடித்தல் என்பதனான் ‘புகழ்ந்தார்’ என்னும் படர்க்கைவினை ஆர் ஈறுகெடப் ‘புகழ்ந்திகு மல்லரோ’ என நிற்றலும் கொள்க. இவையெல்லாஞ் செய்யுள் முடிபு என்பாரும் உளர். செய்யாய் என்னும் முன்னிலை யெதிர்மறை எதிர்மறை படாது ‘செய்’ யென விதி வினையாதலும் உரித்து என்று உரைத்தாரால் உரையாசிரியர் எனின், அற்றன்று ; செய்யாய் என்னும் எதிர்மறை வினையும் செய்வாய் என்னும் விதிவினையும் 3முடிந்த நிலைமை யொக்கு மாயினும், எதிர்மறைக்கண் மறையுணர்த்தும் இடை நிலையும் உண்மையான் முடிக்குஞ்சொல் வேறெனவே படும். மறையுணர்த்தும் இடைநிலையாவன உண்ணலன், உண்டிலன், உண்ணாது, உண்ணேன் என்புழி வரும் அல்லும், இல்லும், ஆவும், ஏயும் பிறவும் ஆம். உண்ணாய் உண்ணேன் என்புழி எதிர்மறை ஆகார ஏகாரம் கெட்டு நின்றன எனல் வேண்டும், அல்லாக்கால் மறைப்பொருள் பெறப்படாமையின். அதனான் எதிர்மறைச் சொல்லே விதிவினைச்சொல் ஆகாமையின் அவர்க்கது கருத்தன்றென்க. அல்லாதூஉம் ஆசிரியர் அக்கருத்தினராயின் ‘செய்யாய் என்னும் எதிர்மறை வினைச்சொல்’ என்றோதுவார்மன் ; அவ்வாறு ஓதாமையான், அவர்க்கது கருத்தன்மையான் உரையாசிரியர்க்கும் அது கருத்தன்மை யறிக. தெய் இது வினைச்சொற்கு உரியதோர் வேறுபாடு உணர்த்துதல் நுதலிற்று. இ-ள் : ‘செய்யாய்’ என்னும் ஆய் ஈற்று முன்னிலை வினைச்சொல் ‘செய்’ என்னும் ஏவல் குறித்த வினைச் சொல்லுமாய் வரும், எ-று.
3. முடிந்தநிலை யொத்தல் எதிர்மறைக்கும் உடன்பாட்டிற்கும் ‘செய்யாய்’ என ஒரே சொல்லமைப்பாய் நிற்றல். ஆனால் பிரித்துப்புணர்க்கும் மிடத்து வேறு வேறாம். செய்+ஆய்= செய்யாய் - உடன்பாடு. செய்+ஆ+ஆய்= செய்யாய் - எதிர்மறை. இதில் எதிர்மறையுணர்த்தும் ‘ஆ’ என்பது கெட்டது. |