பக்கம் எண் :

செய்யாய் சூ. 54345

உ-ம் : 1நீ எ - இல்லத்து உண்ணாய் என்றவழி உண்ணாமையைக் குறித்தலேயன்றி உண்க என்பதும் குறித்தவாறு கண்டு கொள்க. 2இவ்வாறு வருவதும் இசையெச்சம்.

3இன்னும் இச்சூத்திரத்திற்குப் பொருள் செய்யாய் என்னும் வினைச்சொல் செய் எனக் குறைந்து நிற்கவும் பெறும் என்றவாறு. உண்ணாய் என்பதும் உண் எனவரும்.

நச்

இஃது ஓசை வேறுபாட்டான் ஒருசொல் ஒருசொல்லாம் என்கின்றது.

இ-ள் : செய்யாய் என்னும் முன்னிலை வினைச்சொல்-ஒரு தொழிலினை ‘மேற் செய்யாய்’ என்னும் மறையாகிய முன்னிலை வினைச்சொல், செய் என் கிளவி ஆகு இடன் உடைத்து-அத்தொழிலைச் செய் என்னும் உடம்பாட்டு முன்னிலை வினைச்சொல்லாம் இடத்தினையுடைத்து, எ-று.

இடன் உடைத்து என்றதனான், ‘உண்ணாய்’ என்பது மறையாய் வருதலே பெரும்பான்மை ஆயிற்று. அது சிறுபான்மை உடன்பாட்டின்கண் வருங்கால் வேண்டிக் கோடற் பொருண்மைக்கண் வரும் என்று உணர்க.

உண், தின் என்பன முதலிய முன்னிலை யேவல் உயர்ந்தான் இழிந்தானை ஏவுதற்கண் வரும்.

‘அறியாய் வாழி தோழி
......................................................................
பொருளே காதலர் காதல்
அருளே காதலர் என்றி நீயே’       (அகம் 53)


1. இது இளம்பூரணர் உரை.

2. பிறர் இசையெச்சம் என்று கூறார.்

3. இது சேனாவரையர் உரை.