என்னும் அகப்பாட்டினுள் ‘அறியாய்’ என்றது “காதலர் அருளே காதலித்திருப்பார் என்று நீ கூறுகின்றமையால் காதலர் கருத்தின நீ அறியாய்” என முன்னிலை மறையாய் நின்றவாறும், “அறியாய் வாழி தோழி பொறிவரிப் பூநுதல் யாளனவொடு” (அகம். 268) என்னும் அகப்பாட்டினுள் ‘அறியாய்’ என்றது. “காமம் கலந்த காதல் உண்டெனின் நன்றுமன் அது நீ நாடாய் உறுதி” என்றதனோடு இயையுங்கால் ‘அவனோடு கூட்டம் உண்டு எனின், அது மிக நன்று; அதனை நீ ஆராயாமல் கூறுகின்றாய்” என வேண்டிக் கோடற் பொருள் தந்து முன்னிலை ஏவல் உடம்பாய் நின்றவாறும் உணர்க. இங்ஙனம் மறைச்சொல் உடம்பாட்டுப் பொருளைப் படுத்தல் ஓசையாய் உணர்த்தி நிற்றல் சான்றோர் செய்யுளுள் பெரும்பான்மை யென்றுணர்க. இனி, வழக்கினுள்ளும் , ‘இந்நாள் எம் இல்லத்து உண்ணாய், இப்பொழுது சொல்லாய்’ என்றாற்போலப் பெரும்பான்மையும் வழங்குமாறு உணர்க. ‘உண்பாய்’ என்னும் சொல் ஓசைவேற்றுமையான் 1முற்றும் தொழிற் பெயரும் வினையெச்சமும் வியங்கோளுமாய் நின்றாற் போலவும், ‘தடி’ என்பது ஓசை வேற்றுமையான் ‘ஒன்றனைக்கொல்’ என்றும், ‘நீசா’ என்றும் நின்றாற்போலவும், மறைச்சொல் ஓசை வேற்றுமையான் உடம்பாடு உணர்த்திற்று என்று
1. உண்பாய் - எதிர்கால வினைமுற்று; உண்ணுபவனாகிய நீ என்னும் பொருளில் வினையாலணையும் (தொழிற்) பெயர்; உண்பாயாய் என்னும் பொருளில் வினையெச்சம்; உண்பாயாக என்னும் பொருளில் வியங்கோள். |