உணர்க. அங்ஙனம் உணர்த்திற்றேனும் 2மறையுணர்த்தும் ஆகாரம் உடம்பாடு உணர்த்துமோ எனின், அதனை ஏகாரம் ‘உண்பேனே’, ‘உண்ணேனே’ விதிக்கும் மறைக்கும் வந்தாற் போலக் கொள்க. மறை யென்பது ‘செய்யாய்’ என்னும் வாசகத்தால் சூத்திரம் செய்தமையால் பெற்றாம். ‘செய்’ என்பது விதி வினையே உணர்த்துதல் பற்றிச் ‘செய்யென் கிளவி’ என்றார். இனி, சேனாவரையர், ‘செய்யாய் என்னும் முன்னிலை முற்றுச்சொல் ‘ஆய்’ என்னும் ஈறுகெடச் செய் என்னும் முன்னிலையேவல் முற்றாய் நிற்கும்’ என்று பொருள் கூறி, உண்ணாய், தின்னாய், நடவாய், கிடவாய் என்பன ஈறுகெட்டு உண், தின், நட, கிட என நிற்கும்” என்றாரால் எனின், ‘உண்ணாய்’ என்பதும் ‘உண்’ என்பதும் தம்மில் 3பொருள் வேறுபாடு உடைமையின், ‘உண்ணாய்’ என்பதன் பொருளை ‘உண்’ என்பது உணர்த்தி ஈறுகெட்டு நிற்கும் என்றல் பொருந்தாதாம். ‘நீ கலாய்த்திராது உண்ணாய்’ என்ற பொருளை ‘உண்’ என்றது தாராது ஏவற்பொருட்டாய் நின்றவாறு காண்க. அன்றியும் இவ் உண், தின், நட, கிட என்பன
2. உண்ணாய் என்பதில் ஆய் என்பதன் ஆகாரம் எதிர் மறை. அது உடன்பாட்டை யுணர்த்துமோ என்பது வினா. உண்பேன் என்பதில் உள்ள ஏன் என்பதின் ஏகாரம் உண்ணேன் என்பதில் எதிர் மறையில் வருவது போல ஆகாரம் எதிர்மறை உடம்பாடு இரண்டுக்கும் வரும் எனக் கொள்க. 3. பொருள் வேறுபாடாவது : உண்ணாய் - எதிர்மறை, உண் - உடன்பாடு. அதனால் உண்ணாய் என்னும் எதிர் மறைப் பொருளை உண் என்பது உணர்த்தாது, எதிர் மறைப் பொருளை உண் என்பது உணர்த்தாது. ‘நீ கலாய்த்திராது உண்ணாய்’ என்பதில் உண்ணாய் என்பது எதிர்மறைப் பொருள்படாது உண்க என்னும் உடன்பாட்டு ஏவற்பொருளைத்தருதலின் எதிர்மறையே உடன்பாட்டுப் பொருளில் வந்ததாம். |