வற்றை முதல் நிலையென்றே தாமும் 4கூறிப்போந்தார் ஆதலின் 5இவை முதல் நிலையாய் நிற்குமிடத்துக் கரு, செய், வெள் என்னும் முதல் நிலைகள் பண்பு மாத்திரையேயுணர்த்தி ஈறு கெடுதலும் பொருள் உணர்த்துதலும் இன்றி நின்றாற்போல இவையும் வினை மாத்திரையேயுச்சீர்த்தி ஈறுகெடுத்தலும் பொருள் உணர்த்துதலும் நிற்றல் வேண்டும். 6இவை அங்ஙனம் நில்லாது, ஆய் என்னும் ஈறு கெட்டு முன்னிலையேவற்பொருண்மையே உணர்த்தி நிற்கும் என்றலின் ‘முதல்நிலை’ என்றல் பொருந்தாதாம். ஆகவே, வினைச் சொற்கு முதல் நிலைகள் உண், தின், நட, கிட முதலிய என்றாம். 7இவர் பிறர்மதமே கூறினார்; இஃது ஆசிரியர்க்குக் கருத்தன்மையுணர்க. 8அன்றியும், உண், தின், நட, கிட முதலியன முன்னிலை யுணர்த்தி நிற்குமேல் ‘உண்டான், உண்டேன்’ என ‘உண்’ என்னும் முதல் நிலையில் விரிந்து நின்ற ஈற்றான் உணர்த்தும் படர்க்கைக்கும் தன்மைக்கும் வழுவாமாறு காண்க. வெள் இது வினையியலுள் கூறாது ஒழிந்து நின்ற ஒழிபு கூறுகின்றது.
4. கூறிப்போந்தது வினையின் தொகுதி காலத்தியலும் (எச்ச. 19) என்னும் சூத்திரவுரையில். 5,6. இவை-உண், தின், கிட முதலியன, முதல் நிலை என்பது கரு, செய், வெள் முதலிய முதனிலைகள் ஆய் விகுதியுடன் சேராமை போல உண் முதலியனவும் ஆய் விகுதியுடன் சேர்தலும் கெடுதலும் கூடாது. சேர்தலும் கெடுதலும் உண்மையின் உண் முதலியன பொதுவில் முதல் நிலை என்றல் பொருந்தாது; வினைச்சொற்கு முதல்நிலை என்றலே பொருந்தும் என்பது நச்சினார்க்கினியர் கருத்து. 7. இவர்-சேனாவரையர். 8. உண்ணாய் எனும் முன்னிலை உண் எனக்குறைந்து நிற்குமாயின் உண்டான், உண்டேன் எனும் படர்க்கை தன்மை முற்றுகளும் உண் எனக்குறைந்து நிற்றல் வேண்டும். நிற்பின் வழுவாகி விடும். |