இ-ள் : செய்யாய் என்னும் வாய்ப்பட்டதாகிய முன்னிலை முற்றுச்சொல் ஆய் என்னும் ஈறு கெடச்செய் என்னும் சொல்லால் நிற்றலும் உடைத்து, எ-று. ‘ஆகிடனுடைத்து’ என்றதனால் ‘செய்யாய்’ என ஈறு கெடாது நிற்றலே பெரும்பான்மை யென்பதாம். உ-ம் : உண்ணாய், தின்னாய், கிடவாய், நடவாய், தாராய், வாராய், போவாய் என்பன ஈறுகெட, உண், தின், கிட, நட, தா, வா, போ எனச் செய்யென் கிளவியாயின. ஈண்டுச் செய்யாய் என்னும் முன்னிலை வினைச்சொல் என்றது உடன்பாட்டு வினையை. எதிர்மறை வினையாயின் செய்யென் வினையாதல் ஏலாமையறிக. .................................................................... தன்னின முடித்தல் என்பதனால் அழியலை, அலையலை என்னும் முன்னிலை யெதிர்மறை ஐகாரங்கெட, அழியல், அலையல் என நிற்றலும், ஒன்றென முடித்தல் என்பதனால் ‘புகழ்ந்தார்’ என்னும் படர்க்கை வினை ஆரீறு கெடப் ‘புகழ்ந்திருமல்லரோ’ என நிற்றலும் கொள்ளப்படும். ஆதி எதிர்மறையாகச் செய்யாய் என்று தோன்றுகிற முன்னிலை வினை உடன்பாடாகச் செல் எனப் பொருள் தரலும் உண்டு. தம்பி ! இங்கு வாராய் - வா எனப்பொருள் | சத்தியபாமா கதவைத் திறவாய் - திற | சற்றே இங்கு நோக்காய் - நோக்கு |
இவை எதிர்மறைப் பொருளும் தரும் ஆகலின் பொதுவினையாகக் கோடல் வேண்டும். நெடில் ஒற்று விகுதி ஆன் ஆள் ஆர் ஏன் தனிப் பகுதியுடன் எதிர்மறையே காட்டும். ஓடு + ஆன் = ஓடான், படி + ஆன் = படியான் பகுதியுடன் இடைநிலை சேரின் |