நச். இது வடசொற்கு இலக்கணம் கூறுகின்றது. இ-ள் : வடசொற்கிளவி - வடசொல்லாகிய சொல், வட எழுத்து ஒரீஇ-உரப்பியும் எடுத்தும் கனைத்தும் கூறும் வட வெழுத்துக்களின் நீங்கி, எழுத்தொடு புணர்ந்த சொல் ஆகும். இருசார் மொழிக்கும் பொதுவாகிய எழுத்தான் இயன்ற சொல்லாம், எ-று. அவை, லாரி, மேரு, குங்குமம், மணி, மானம், மீனம், வீரம், வேணு, காரணம், காரியம், நிமிர்த்தம், காரகம் என்றாற் போலச் சான்றோர் செய்யுட்கண் வருவன. இனி ஒழிந்தோர் செய்யுட்கண்வருவன, கமலம், அமலம், மூலம், கோபம், ஞானம், நேயம், தமாலம், தாரம், திலகம், நாமம், யானம், யோனி, உற்பலம் இவைபோல்வன பிறவுமாம். வெள் இது வடசொல்லாமாறியது எனக் கூறுகின்றது. இ-ள் : வடசொற் கிளவியாவது வடசொற்கேயுரிய வெனப்படும் சிறப்பெழுத்தின் நீங்கி இருசார் மொழிக்கும் பொதுவாகிய எழுத்தான் இயன்ற சொல்லாம், எ-று. வடவெழுத்தாவன உரப்பியும் எடுத்தும் கனைத்தும் கூறத் தோன்றுவனவாகிய ஆரியத்திற்கேயுரிய சிறப்பெழுத்தால் வருவன தமிழ் ஒலிக்கு ஏலாமையின் ‘வடவெழுத்தொரீஇ எழுத்தொடுபுணர்ந்த சொல்’ என்றார் ஆசிரியர். எழுத்தொடு புணர்தலாவது தமிழுக்கும் வடமொழிக்கும் பொதுவான எழுத்தினால் இயன்று வழங்குதல். அவை, வாரி, மேரு, குங்குமம், வீரம், காரணம், காரியம், நிமித்தம் என்றாற் போலச் சான்றோர் செய்யுட்கண், வருவன. வடசொல் என்பது ஆரியற் சொற் போலுஞ் சொல்’ என்பர் இளம்பூரணர். வடவெழுத்தா னமைந்த ஆரியச் சொற்களும் பொது வெழுத்தா னமைந்த தமிழ் திரி சொற்களும் ஆக வடநாட்டில் வழங்கிய இருவகைச் சொற்களையுமே |