பக்கம் எண் :

முன்னிலையில், ஈ.ஏ, சூ. 55351

வ-று : 1“சென்றீ பெரும நிற்றகைக்குநர் யாரே” (அகம். 46) எனவும்,

“அட்டிலோலை தொட்டனை நின்மே (நற். 300) எனவும் 2இவையிரண்டும் தத்தம் குறிப்பிற் பொருள் செய்யும் இடைச்சொல் என்பது; ஈண்டு எப்பொருளை விளக்கி நின்றனவோ எனின், புறத்துறவு நீர்மைப் பொருள்பட வந்த என்றவாறு.

சேனா

இ-ள் : முன்னிலை வினைச்சொல்முன் வரும் ஈகாரமும் ஏகாரமும் அம்முன்னிலைச் சொற்கேற்ற மெய்யூர்ந்து வரும், எ-று.

உ-ம் : சென்றீ பெரும நிற்றகைக்குநர் யாரோ (அகம். 46) ‘அட்டிலோலை தொட்டனை நின்மே (நற். 300) என அவைமுன்னிலைக்கேற்ற மெய்யூர்ந்து வந்தவாறு கண்டு கொள்க.

முன்னிலை யென்றாரேனும் செய்யென் கிளவியாகிய முன்னிலையென்பது அதிகாரத்தாற் கொள்க.


1. சென்றீ........ யாரே-வாயில் வேண்டிச்சென்றதலை மகற்குத் தோழி வாயில் மறுத்தது ‘பெருமானே ! நின்னைத்தடுப்பார் யார் செல்வாயாக’ என்பது பொருள்.

‘அடில்... நின்மே’ ........ பரத்தையிற் பிரிந்து வந்த தலைவன் பாணனை வாயிலாக அனுப்பக் காமக்கிழத்திவாயில் மறுத்தது.

2. ஈ, ஏ என்னும் இரண்டு இடைச்சொற்களும், சென்றீ, நின்மே என நின்று, பரத்தமைகொண்டு ஓழுகி வந்த தலைவனிடம் பேசும்போது வந்தனவாதலின் புறத்து நீர்மைப் பொருள்பட வந்தன என்றார். புறந்துநீர்மை-பரத்தமையொழுக்கம்.