3ஈகாரம் ஒன்றேயாக புக்கி, உண்டீ, உரைத்தீ, சென்றீ முன்னிலை வினையீற்று வேறுபாட்டிற்கேற்ப மெய்வேறுபட்டு வருதலான் ‘அந்நிலை மரபின்மெய்’ என்றார். ஏகாரம் மகரம் ஊர்ந்தல்லது வாராது. இவ்வெழுத்துப்பேறு புணர்ச்சி விகாரம் ஆகலின் ஈண்டும் கூறற்பாற் றன்றெனின், அற்றன்று, ‘இயற்பயர் முன்னர் ஆரைக்கிளவி’ (சொல்.270) அப்பெயரோடு ஒற்றுமைப்பட்டு நின்றாற்போல முன்னிலை முன்னர் ஈயும் ஏயும் முன்னிலைச் சொல்லோடு ஒற்றுமைப்பட்டு நிற்றலான், நிலைமொழி வருமொழி செய்து புணர்க்கப்படாமையான், அம்மெய் 4புணர்ச்சி விகாரம் எனப்பாட வென்க. அஃதேல், இடையியலுள் ‘இயற்பெயர் முன்னர் ஆரைக்கிளவி (சொல். 270) என்பதனோடு இயைய இதனையும் வைக்க எனின், ஆண்டுவைப்பிற் செய்யாய் என்பது செய்யென் கிளவியாய வழியது அவ்வீகார வேகார வரவு என்பது பெறப்படாமையின் ஈண்டு வைத்தார். 5‘செய்யாய்
3. ஈகாரம் ஒன்றேயாக-ஈகாரம் ஒன்றே. புறத்துறவு என்பதற்கு அகத்தே விருப்பிருந்தும் புறத்தே வெறுப்புக்காட்டுதல் என்பர் கணேசய்யர், புறத்து + துறவு = புறத்துறவு ஆயிற்றென்பர் அவர். 4. இயற்சொல்முன் ஆரைக்கிளவி சாத்தனார், சாத்தன் + ஆர் எனப்பிரித்துப்பின் சாத்தனார் எனப்புணர்க்கப்படாது. அதுபோல செல் + ற் + ஈ = சென்றீ எனப்பிரித்துப் புணர்க்கப்டாது. அதனால் இதில் வரும் மெய்யுணர்ச்சி விகாரத்தால் வரும் மெய்யன்று. 5. ‘செய்யாய் என்னும் முன்னிலை வினைச்சொல்’ என்னும் சூத்திரம் வினையியலில் முன்னிலை வினை கூறிய இடத்தில் வைக்கப்பட வேண்டுவது. ஈண்டு வைத்ததன்பயன் யாதெனின் முன்னிலையில் ஈகார ஏகார வரவு செய்யாய் என்பது செய் என் கிளவியாகும் போதுதான் என்பதையுணர்த்த வேண்டி ஈகார ஏகார வரவு கூறுதற்கு முன்னர் செய்யாய என்பது செய் எனவரும் என்பதைக்கூற வேண்டுமாதலின் அது பயன் என்க. |