முன்னிலையில், ஈ.ஏ, சூ. 55 | 353 |
என்னும் முன்னிலை வினைச்சொல்’ என்பதனை ஈண்டு வைத்ததற்கும் இதுவே பயனாதல் அறிக. முன்னிலைச்சொல் விகாரம் ஒருங்குணர்த்தல் அதற்குப் பயன் எனினும் அமையும். ஈயென்பதோர் இடைச்சொல் உண்டென்பது இச் சூத்திரத்தாற் பெற்றாம். இவையிரண்டும் ஈண்டுப் புறத்துறவு பொருள்பட நின்றன. அசைநிலை யென்பாரும் உளர். தெய் இதுவும் முன்னிலை வினைச் சொற்கண் வருவதோர் வேறுபாடு உணர்த்துதல் நுதலிற்று. இ-ள் : முன்னிலை வினைச் சொற்கண் ஈகாரமும் 1மகரம் ஊர்ந்த ஏகாரமும் முன்னிலை மரபினுடைய மெய்யை யூர்ந்து வரும், எ-று. முன்னிலை மரபின் மெய்யாவன உண், தின் 2என்னும் சொற்கண் ஈற்றெழுத்தோடு பால்காட்டும் எழுத்தினைப் புணர்க்க இடையே வரும் மெய்யெழுத்து. உ-ம் : | ‘சென்றீ பெரும நிற்றகைக்குநர் யாரே’ (அகம் 46) | | ‘அட்டிலோலை தொட்டனை நின்மே’ (நற் 300) |
‘இன்னா துறைவி யரும்படர் களைமே’ எனவரும். மேல் ஓதப்பட்ட இ, ஐ, ஆய் அன்றி 3இவையும் சிறுபான்மை வரும் எனக் கொள்க. நச் இது பொருள்தரும் இடைச் சொற்களுள் சில நிலை வேறுபாடுமாறு கூறுகின்றது. இ-ள் : முன்னிலை முன்னர் ஈயும் ஏயும்-முன்னிலை வினைச்சொல்முன் வரும் ஈகாரமும் ஏகாரமும், அந்நிலை
1. ‘மகரம் ஊர்ந்த’ என்பது தேவையற்றது. 2. என்னும் சொற்கண் -என்பன போலும் சொற்கண். 3. இவையும்-ஈகாரமும் ஏகாரமும். |