மரபின் ஊர்ந்து வருமே-அம்முன்னிலை வினைச் சொற்கள் தாம் நிற்றற்குரிய முறைமையையுடைய மெய்களை ஊர்ந்து வரும், எ-று. முன்னிலைச் சொல்லாவன செல்,நில், புகு, உண், தின், உரை என்றாற்போல வருவனவாம். உ-ம் : | ‘சென்றீ பெரும நிற்றகைக்குநர் யாரோ’ (அகம் 46) |
‘அட்டிலோலை தொட்டனை நின்மே’ (நற்.300) என வரும். இவற்றுள் ஈகாரம் புக்கீ, உண்டீ, உரைத்தீ, சென்றீ எனக் க ட த ற வை யூர்ந்துவரும் என்பது தோன்ற ‘அந்நிலைமரபின் மெய்’ என்றார். ஏகாரம் மகரம் ஊர்ந்துவரும். இவை நிலைமொழி வருமொழி செய்து புணர்க்கப்படாமையின், புணர்ச்சி விகாரம் இன்றி முன்னிலைச் சொல் விகாரமாயிற்று. ‘உண்பாய்’ என்பதற்கு மறையாகிய ‘உண்ணாய்’ என்னும் சொல் படுத்தல் ஓசையால் ‘உண்டலைச் செய்’ என்னும் பொருள் தந்து நிற்றலின், ‘செய்யென் கிளவி ஆகிடனுடைத்து’ (எச்ச-54) என்று சூத்திரம் செய்ததன் பின்னர், ‘செல்லுதலைச் செய்’ நிற்றலைச் செய்’ என இச்சூத்திரத்தின் முதல் நிலைகளும் 1‘செய்’ என்னும் வாசகத்தினையே உணர்த்தி நிற்கும் என்பது கருதி ‘செய்யென் கிளவியாகிடனுடைத்து’ என்பதன் பின் இதனை வைத்தார். வெள் இது முன்னிலை வினைச் சொற்கண் வருவதோர் வேறுபாடு கூறுகின்றது. இ-ள் : முன்னிலை வினைச்சொற்கண்வரும் ஈகாரமும் ஏகாரமும் அம்முன்னிலை சொற்கேற்ற மெய்யூர்ந்து வரும் எ-று. உ-ம் : | ‘சென்றீ பெரும நிற்றகைக்குநர் யாரே’ | | அட்டி லோலை தொட்டனை நின்மே’ |
1 செய் என்னும் வாசகத்தினையே உணர்த்தி நிற்கும்=சென்றீ, நின்மே என்பன செல்வாய் நிற்பாய் எனச் செய்யாய் என்னும் வாய்பாட்டுப் பொருள்தரினும் ‘செய்’ என்னும் வாய்பாட்டளவிலேயே அமைந்து அதாவது செல், நில் என்னுமளவிலேயே அமைந்து நிற்கும். |