முன்னிலையில், ஈ.ஏ, சூ. 55 | 355 |
என முறையே ஈகாரமும் ஏகாரமும் முன்னிலைக் கேற்ற மெய்யூர்ந்து நின்றன. முன்னிலை யென்றாரேனும் செய்யென் கிளவியாகிய முன்னிலை யென்பது அதிகாரத்தாற் கொள்க. ஈகாரம் ஒன்றேயாயினும் புக்கீ, உண்டீ, உரைத்தீ, சென்றீ என முன்னிலை வினையீற்று வேறுபாட்டிற் கேற்ப அஃது ஊர்ந்து வரும் மெய் வேறுபடுதலால் அந்நிலை மரபின் மெய்யூர்ந்து வரும் என்றார். ஆதி முன்னிலை வினையின் ஈற்றிலுள்ள ஈ, ஏ மரபால் அவற்றுக்குரிய மெய்யெழுத்தைச் சேர்ந்தே வரும். புகு, உண், உரை, செல் என்பன புக்கீ, உண்டீ, உரைத்தீ சென்றீ என வருவது முந்தைநெறி, புகுதி, உண்ணுதி, உரைத்தி, செல்தி-இற்றை நாள் நெறி. அங்கு ஈ என்பது க், த் மெய் மீது நிற்கிறது. நில்-நின்ம்-நின்மே-இங்கு ஏ ஈற்று ‘ம்’ மீது நிற்கின்றது. குறிப்பு : உரைத்தி உண்டி சென்றி என்பனவற்றின் ஈற்றெழுத்து நீட்டல் விகாரம் பெற்றது என்பதே நேர்மையாகும். புகுதி என்பதைப் புக்கி என்பது விதி விலக்கிற் கொள்க. புகு-புக்கீ ஆயின் வகு நகு எடு கொடு படு இவற்றுக்கு முறையென்னை? புறனடை 446. | கடிசொ லில்லை காலத்துப் படினே. (56) | | | | (கடிசொல் இல்லை காலத்துப் படினே) |
ஆ. மொ. இல. No word is to be discarded if it has gained currency in course of time. பி. இ. நூ. நன் 462 பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையி னானே. |