பக்கம் எண் :

356தொல்காப்பியம்-உரைவளம்

இளம்

இச்சூத்திரம் என்னுதலிற்றோவெனின், மேற்கூறப்பட்ட அவற்றுக்கெல்லாம் பொதுவாயதோர் புறனடையுணர்த்துதல் நுதலிற்று.

வ-று : 1அழான், புழான் என்பன; அக்காலத்து அவையுண்மையான் ஆசிரியன் ஓதி முடிவுகூறப்பட்டன.

இனிச் 2சுட்டுச்சினை நீடிய ஐகார வீற்றுப்பெயர் (தொகை, மரபு 17) உறழ்ந்து முடிக என்றான் ஆசிரியன்; அக்காலத்து அவை யுண்மையான்; இப்பொழுது அவற்றிற்கு உதாரணம் இல்லை பிறவும் அன்ன.

இனி ஆசிரியனால் ஆகா என ஓதப்பட்டன தோன்றுவவுள;


1. வரலாற்றில் கூறப்பட்ட இருவகை யுதாரணங்களைக் கொண்டு இச்சூத்திரத்தின் பொருள் இருவகையென்பது புலப்படும். (1) காலத்துப்படின் இக்கால வழக்கில் இல்லாமல் ஆசிரியன் காலத்து வழக்கில் இருந்திருப்பின், கடிசொல் இல்லை-அவனால் இலக்கணம் கூறப்பட்ட சொல் இக்காலத்தில்லையென்று கடியப்படுதல் இல்லை. (2) காலத்துப்படின்-ஆசிரியன் காலத்து வழக்கில் இல்லாமல் அவ்வகாலங்களில் புதியன வாய்ச்-சொற்கள் தோன்றுமாயின், கடி சொல் இல்லை-ஆசிரியனால் இலக்கணம் கூறப்படாமையால் கடியப்படும் சொற்கள் இல்லை; ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியனவே. இவ்விரண்டனுள் பின்னதையே யாவரும் கொண்டனர்.

2. சுட்டுச்சினை நீடிய ஐகார ஈற்றுப்பெயர் ஆண்டை, ஈண்டை, ஊண்டை முன்னதை ஒன்றென முடித்தலாற் கொண்டனர்.