பக்கம் எண் :

புறனடை சூ. 56357

அவை 3ஞண்டு என்றும் 4நீர் கண்டக என்றும் 5சம்புசள்ளை என்றும் வரும்.

சேனா

இ-ள் : 1இவை தொன்று தொட்டன வல்லன வென்று கடியப்படுஞ் சொல் இல்லை; அவ்வக் காலத்துத் தோன்றி வழங்கப்படுமாயின், எ-று.

உ-ம் : சம்பு, சள்ளை, சட்டி, சமழ்ப்பு எனவரும். இவை தொன்று தொட்டு வந்தன வாயின், முதலாகாதனவற்றின் கண்.

சகரக் கிளவியும் அவற்றோ ரற்றே.

அ ஐ ஒளவெனும் மூன்றலங் கடையே       (எழுத். 62)

என விலக்கார் ஆசிரியர். அதனான் அவை பிற்காலத்துத் தோன்றிய சொல்லேயாம் என்பது.

இஃது எழுவகை வழு வமைதியுள் ஒன்றாகாது ஓர்பாது காவலாதலிற் கிளவியாக்கத் தியைபின்மையான் ஈண்டுக் கூறினார் என்பது.


3. ஞகரமெய் அகர உயிருடன் மொழி முதலாதல் இல்லை என ஆசிரியர் கூறினார் (மொழி மரபு 31) அதற்கு மாறாக ஞண்டு வந்தது.

4. நீர் கண்டக-விளங்கவில்லை. காண்க-கண்டக ஆயதோ?

5. சம்பு, சகரமேய் அகரத்துடன் மொழி முதலாதல் இல்லை என ஆசிரியர் கூறினார் (மொழி மரபு 29) அதற்குமாறாகச் சம்பு முதலியன வந்தன.

1. இவ்வுரை இளம்பூரணரின் இரண்டாவது உரை உதாரணத்துக்கு ஏற்றது. உரையாளர் யாவரும் இதையே உரைத்தனர்.