பக்கம் எண் :

புறனடை சூ. 56359

என்பதனுட் 3படர்க்கை வினைச்சொல் ஈறு திரிந்து நின்றது. காலப் பொருண்மை வழுவாமையின் குற்ற மின்றாயிற்று.

4ஆரம ரலறத் தாக்கித் தேரோடு
அவர்ப்புறங் காணே னாயின் சிறந்த
பேரமர் உண்கண் இவனினும் 5பிரிக”       (புறம். 71)

எனவும், ‘முறை திரிந்து மென்கோல் 6செய்தேனாகுக’ (புறம். 71) எனவும் தன்மைக்கண் எதிர்காலம் குறித்த வஞ்சினம் வியங்கோள் வாய்பாட்டான் வந்தன.

7பகலே பலருங் காண நாண்விட்
டகல்வயற் படப்பை யவரூர் வினவிச்


3. ஈறுதிரிந்தவாறு-பெற்றேன் என்பது இறந்தகாலப் பொருளிலேயே பெற்றிசின் எனத்திரிந்தது.

4. பொருள் “அரிய போரில் பகைவர் அலறும் படித்தாக்கி அவர்களைத் தேரோடி புறமுதுகிடுமாறு செய்யேனாயின், சிறந்த பெரிய மதர்த்த மையுண்ட கண்ணுடைய இவளைப் பிரிவேனாகும்”

5. பிரிவேன் எனவர வேண்டிய தன்மையொருமை வினைமுற்றுச்சொல் பிரிக என வியங்கோளாகத் திரிந்து வந்தது.

6. செய்தேன் ஆவேன் எனவரவேண்டிய சொல் செய்தேன் ஆகுக என வியங்கோளாக வந்தது.

7. பொருள் : இடி மின்னல் போலும் தொகுதியுடைய மேகம் பல நாளாகப் பெய்யவில்லை யென்றாலும் நீர் குறையாது அருவி ஒலிக்கும்படியான மூங்கில் மிகுந்த அகன்ற இடமுடைய வானைத்தோயும் பெரிய மலைநாட்டுக்குரிய தலைவனை நீ எம்மைப் பிரிந்து வந்தமையால் சான்றோன் அல்லன் என்று சொல்லி வருவதற்காகப் பகற்போதிலேயே பலரும் காணும்படி நம் நாணத்தையும் விட்டு அகன்ற வயலையும் தோட்டத்தையும் உடைய அத்தலைவன் ஊர் எங்குளது என்று வருவாரிடம் வினவிப் போவோம் வா தோழி.