பக்கம் எண் :

புறனடை சூ. 56361

இச்சூத்திரம் ‘எதிர் பொருள் உரைத்தல்’ என்னும் உத்தியாம். இவ்வாறு பின்னர் வழங்குன எல்லாவற்றிற்கும் இதுவே விதி.

இனி, ஒன்றென முடித்தலால், புதியன தோன்றினாற்போலப் பழையன கெடுவனவும் உள. அவை, அழன், புழன் முதலியனவும், எழுத்திற் புணர்ந்த சொற்கள் இக்காலத்து வழங்காதனவுமாம்.

வெள்

இது காலந்தோறும் புதிதாகத் தோன்றிய சொற்களும் கொள்க என்கின்றது.

இ-ள் : இவை தொன்று தொட்டு வந்தன வல்ல என்று கடியப்படும் சொற்கள் இல்லை; அவ்வக் காலத்துத் தோன்றி நன்மக்கள் வழக்கினுள்ளும் செய்யுளுள்ளும் வழங்கப்பட்டு வருமாயின், எ-று.

உ-ம் : சம்பு, சள்ளை, சட்டி, சமழ்ப்பு எனவரும். இவை தொன்று தொட்டு வழங்கப்பட்டிருக்குமாயின், ‘சகரக் கிளவியும் அவற்றோரற்றே, அ ஐ ஒளவேனும் மூன்றலங்கடையே’ என ஆசிரியர் சூத்திரஞ் செய்யார். எனவே இச்சொற்கள் ஆசிரியர் காலத்திற்குப் பின்தோன்றிய பிற்காலச் சொல்லேயாம்.

ஆதி*

காலத்தால் நிலைத்த எச்சொல்லையும் கடிவதற்கில்லை. ஏற்க வேண்டியதே.

ரம்பம் ராமன் லகான் லட்டு டப்பி டங்கா யந்திரம் யவனர் முதலியவையும்; மோட்டார் மீற்றர் கிராம் கில்லோ இன்னும் பெரும்பாலரின் வழக்கிலுள்ள பொருளற்ற எல்லாச் சொற்களும் ஏற்கத் தக்கவையே.


* இவர் உரை பொருத்தமில்லாததோடு தவறுடையதுமாம். ரம்பம் ராமன் முதலியன வடசொற்களும் திசைச்சொற்களுமாம். அவற்றைச் செய்யுளீட்டச் சொற்களாக மேற்கொள்ளலாம் என்று முன்னர்க் கூறினார். ஆசிரியர் ஆதலின் இவ்வுரை அதிலடங்கும். காலத்தில் தோன்றும் தமிழ்ச் சொற்கள் கடியப்படுவனவல்ல என்றற்கே ஆசிரியர் இச்சூத்திரம் கூறினார்.