பக்கம் எண் :

362தொல்காப்பியம்-உரைவளம்

வேற்றகத்துப் பெண் மருமகளாகவரின் நம் அகத்துப் பெண்ணே ஆகிறாள். அவ்வாறே மொழிகளையும் கொள்ளுதல் வேண்டும்.

செய்யுள் விகாரம்

447. *குறைச்சொற் கிளவி குறைக்கும்வழி யறிதல்
 குறைத்தன வாயினு நிறைப்பெய ரியல       (57)
  
 (குறைச்சொல் கிளவி குறைக்கும்வழி அறிதல்
குறைத்தன ஆயினும் நிறைப்பெயர் இயல)்

ஆ. மொ. இல.

The use of a clipped word must find
its own place.

பி. இ. நூ.

முத்து. ஒ. 118, 119.

ஒருமொழி மூவழிக் குறைதலும் வரையார்
குறைந்தன வாயினும் நிறைந்தன வாகும்.

இளம்

இச்சூத்திரம் என்னுதலுற்றோவெனின், செய்யுட்கு ஆவதோர் முடிபு கூறுதல் நுதலிற்று.

உரை : 1முன் செய்யுளீட்டுந் தன்மையானே கடியப்படும்


* இதனை இரண்டு சூத்திரமாகக் கொள்வர் பிறர்.

1. “செய்யுள் ஈட்டச் சொற்களாக இயற்சொல் முதலியன கொள்ளப்பட்டபோது சொற்கள் எழுத்துக் குறைபாடுடையன கொள்ளப்படும் எண்பது கூறப்படாமையால், அவை, செய்யுளீட்டும் தன்மையில் நீக்கப்படும் என்பது அமைந்தது. இனி அச்சொற்களை முழுவதும் கிடக்குமாறே செலுத்தாமல் எழுத்துக் குறைத்துச் செலுத்தலும் உண்டு ஒரோவழி. அப்படிச் செய்யுளில் செலுத்தினாலும் முழுச் சொல்லாகவே புலப்படும் செவிக்கு” என்பது இவ்வுரைக் கருத்து. கிடைகடாவாது - சொல்கிடந்தவாறே செலுத்தாமல்.