பக்கம் எண் :

செய்யுள் விகாரம் சூ. 57363

என்றே யறியக் கிடந்தது; இனி அவற்றை முழுவதூஉம் கிடைகடாவாது குறைத்துக் கடாவப்படுதலும் உடைய ஒரோவழி, அங்ஙனம் குறைக்கப்பட்டதேனும் குறையாது நின்றவிடத்தியலுமாறே புலப்பட்டு இயலும் செவிக்கு, எ-று.

இனி, அவை குறைக்குமிடத்துத் தலைக்குறைத்தலும், இடைக் குறைத்தலும், கடைக்குறைத்தலும் என மூன்று வகையாற் குறைக்கப்படும் என்பது.

அவற்றுள் தலைக்குறைந்தது, ‘மரையிதழ் புரையும் அம்செம் ஈறடி’ என்பது. ஆண்டுத் தாமரை யெனற்பாலார் ‘மரை’ என்று தலைக்குறைத்தார் என்பது.

இடைக்குறைத்தல் என்பது, ‘வெரிநின் ஓதி வெருக்கண்டன்ன’ என்பது. ஆண்டு ‘ஓந்தி’ யெனற்பாலார் ‘ஓதி’ என்று இடைக்குறைத்தார் என்பது.

இனிக் கடைக் குறைத்தல் என்பது, ‘நீலுண் துகிலிகை கடுப்ப’ என்பது, ‘நீலம் உண் துகிலிகை’ எனற்பாலார் ‘நீலுண்துகிலிகை’ என்றார் என்பது.

குறைக்கும் வழியறிதல் என்பது குறைக்கைக்குத் தகக் குறைக்கப்படுவது என்றற்கு என்பது.

‘நிறைப்பெயரியல்’ எனவே இவ்விகாரம் பெயர்க்கண்ணதே என்பது பெற்றாம்.

மற்றுச் ‘சென்றார் அன்பில தோழி’ என அன்பிலர் எனற்பாலார் ‘அன்பில’ என்றார், எனவே, வினைச்சொல்லும் குறைக்கப்பட்ட தெனின், 1‘நிறைப்பெயரியல’ என்றது


1. நிறைப் பெயரியல என்றது பெயர்ச்சொல் என்றவாறு; ஆதலின் அன்பிலர் என்பது வினைச் சொல்லாதலின் அன்பில எனக் கடைக்குறைத்தல் தவறாகும், என்று கருத்துக்கொள்க. வினைச்சொல் குறைக்கப்படுதலை ஒன்றென முடித்தலாற் கொள்வர் நச்சினார்க்கினியர்.