செய்யுள் விகாரம் சூ. 57 | 365 |
குறைந்த வழியும் நிறைந்த பெயராகக் கொள்க என்றவாறாம். குறைக்கப்படுவன பெயராகலின் ‘நிறைப் பெயரியல’ என்றார். தெய் (குறைச்சொற்........................அறிதல்) குறைச்சொல்லாமாறு உணர்த்துதல் நுதலிற்று. இ-ள் : யாதானும் ஒரு சொல்லைக் குறைக்க வேண்டுவழிக் குறைக்க வேண்டும் இடம் அறிந்து குறைக்க, எ-று. அது தலைக்குறைத்தலும் இடைக் குறைத்தலும் கடைக்குறைத்தலும் என மூவகைப்படும். உ-ம் : ‘மரை யிதழ் புரையும் அஞ்செஞ்சீறடி’ என்ற வழித் ‘தாமரை’ என்பது தலைக் குறைந்து நின்றது. ‘அகலிரு விசும்பினாஅல்’ என்றவழி ‘ஆரல்’ என்பது இடைக் குறைந்து நின்றது. ‘நீலுண்டுகிலிகை’ என்றவழி ‘நீலம்’ என்பது கடைக் குறைந்து நின்றது. தொகுக்கும்வழித் தொகுத்தல் என்பதனோடி தனிடை வேற்றுமை யென்னை யெனின், ஆண்டு விரிந்து நின்ற சொல் தொகுக்க வேண்டுவழித் தொகுக்குமாறு கூறினார்; ஈண்டு 1இயற்கையிற் குறைதலிற் குறைச்சொல் என்றார். (குறைந்தன.................................பெயரியல) மேலதற்கோர் புறனடை யுணர்த்துதல் நுதலிற்று. இ-ள் : குறைச் சொற்கிளவி குறைந்து நின்ற..............வாயினும் பொருள் வேறுபடா; நிறைந்த பெயரியல, எ-று. உதாரணம்மேற் காட்டப்பட்டன. இவ்விதிமேல் விகாரப்பட்ட சொற்கும் ஒக்கும் என்று கொள்க. நச் (குறைச்சொற்.......................................அறிதல்) இது செய்யுள் விகாரம் கூறுகின்றது. |