செய்யுள் விகாரம் சூ. 57 | 367 |
‘கண்திரள் முத்தம் கொண்டு வந்து’ என்புழி, ‘வந்தன்று’ என்னும் வினையும், ‘சான்றோர் என்பிலர் தோழி’ என்புழி ‘என்பாரிலர்’ என்னும் வினையும் சிறுபான்மை குறைத்தல் தன்னின முடித்தலால் கொள்க. வெள் (குறைச்சொற்.........அறிதல்) இது செய்யுள் விகாரங் கூறுகின்றது. இ-ள் : குறைக்குஞ் சொல்லைக் குறைக்குமிடம் அறிந்து குறைக்க, எ-று குறைக்கும் வழியறிதல் என்றது, ஒரு சொற்கு முதல் இடை கடையென மூன்றிடத்தினும். இச்சொல் இன்ன இடத்துக் குறைக்கத் தக்கது என அறிந்து குறைக்க என்றவாறு. உ-ம் : ‘தாமரை’ என்பது ‘மரையிதழ் புரையும் அஞ்செஞ் சீறடி’ என முதலிலும், ‘ஓந்தி’என்பது ‘வேதின வெரிநின் ஓதி முது போத்து’ என இடையிலும் நீலம் என்பது ‘நீலுண் துகிலிகை’ எனக்கடையிலும் குறைக்கப்பட்டவாறும். அச்சொற்கள் அவ்விடங்களிலன்றிப் பிறவிடங்களிற் குறைத்தற்கு ஏலாமையும் கண்டு கொள்க............ (குறைத்தன............பெயரியல) இதுமேலதற்கோர் புறனடை இ-ள் : செய்யுளகத்துச் சொற்கள் குறைக்கப்பட்டன வாயினும் அவை பொருளுணர்த்துமிடத்து நிறைந்து நின்ற பெயரின் இயல்புடையனவாம், எ-று. என்றது, முற்கூறிய உதாரணங்கள் மரை, ஓதி, நீல் எனக் குறைக்கப்பட்டன வாயினும் முறையே தாமரை, ஓந்தி, நீலம் என நிறைந்த பெயர்களின் பொருள்களைத் தந்தே நிற்றல் காணலாம். இவ்வாறு செய்யுளிற் குறைக்கப்படுவன பெயரே யாகலின் ‘நிறைப் பெயரியல’ என்றார். ஆதி (குறைச்சொற்...............அறிதல்) குறைபடு சொற்களைக் குறைக்கும்வழி அறிந்து குறைக்க. |