பக்கம் எண் :

368தொல்காப்பியம்-உரைவளம்

தாமரை மலர் - மரைமலர் - முதற்குறை
ஓந்தி ஒன்று -ஓதி ஒன்று - இடைக்குறை
நீலம் விளங்கு - நீல் விளங்கு - கடைக்குறை.
ஆகாயம் - காயம்

விமானம் - மானம்
 முதற் குறை.

(குறைத்தன............பெயரியல)

எழுத்துக் குறைந்திருப்பினும் அது நிறைந்த சொல்லின் பொருள்தரும்.

இடைச்சொல் வேற்றுமைச்சொல்

448. இடைச்சொ லெல்லாம் வேற்றுமைச் சொல்லே       (58)
  
 (இடைச்சொல் எல்லாம் வேற்றுமைச் சொல்லே)

ஆ. மொ. இல.

All morphemes are capable of differentiating
other words.

பி. இ. நூ.

இ. வி. 359

முத்து. ஒ. 120
 தொல் சூத்திரமே.

இளம்

இச்சூத்திரம் என்னுதலிற்றோவெனின், இடைச்சொல் எனப்பட்டன; அவற்றுக்கட் படுவதோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று.

உரை : முன்னர் வேற்றுமை யோத்தினுள் ஐ, ஒடு, கு, இன், அது, கண் என்னும் உருபுகளையன்றே வேற்றுமைச்சொல் என்று உணர்த்தியது; இனி அவையன்றி ஒழிந்த இடைச்சொற்களையும் வேற்றுமைச்சொல் என அமையும், எ-று.