இடைச்சொல் வேற்றுமைச்சொல் சூ. 58 | 369 |
என்னை? அவையும் தாமாக நில்லா; பெயரும் தொழிலும் அடைந்து நின்றும் அவற்றையே 1பொருள் வேற்றுமைப்படுக்கும் ஆகலின் என்பது. சேனா இ-ள் : பிறிதோர் சொல்லை வேறுபடுப்பனவும் பிறிதோர் சொல்லை வேறுபடுக்கப்படுவனவும் எனச் சொல் இருவகைப்படும்; பிறிதோர் சொல்லான் வேறுபடுத்தலாவது விசேடித்தல். பிறிதோர் சொல்லான் வேறுபடுக்கப்படுதலாவது விசேடிக்கப்படுதல், இடைச்சொல் எல்லாம் பிறிதோர் சொல்லை வேறு படுக்குஞ் சொல்லாம், எ-று. வேறுபடுத்தலும் வேறுபடுக்கப்படுதலும் ஆகிய இரண்டும் பொதுவகையான் எல்லாச் சொற்கும் கூறாமை யெய்துமாகலின் இடைச்சொல் எல்லாம் வேற்றுமைச்சொல் என்றதனான், இவைவேறுபடுக்குஞ் சொல்லாத லல்லது ஒரு ஞான்றும் வேறு படுக்கப்படுஞ் சொல்லாகாவென நியமித்தவாறாம். அவை அன்னவாதல் இடையியலுள் ஓதப்பட்ட இடைச்சொல் வழக்கினுள்ளும் செய்யுளுள்ளும் வரும்வழிக் கண்டு கொள்க. வேற்றுமைச் சொல் வேற்றுமையைச் செய்யுஞ் சொல்என விரியும். வேற்றுமை யெனினும் வேறுபாடு எனினும் ஒக்கும். இடைச்சொல் எல்லாம் வேற்றுமைச் சொல்லாயினும் அவற்றுள் 1ஒரு சாரனவற்றை வேற்றுமைச் சொல் என்று ஆள்ப; இயற்சொல்லுள் ஒருசாரனவற்றை 2இயற்பெயர் என்றாற்போல் என்பது; இதுவும் ஓர் நயம். தெய் இடைச் சொற்கண் எஞ்சிநின்றதோர் பொருள் நிகழ்ச்சி உணர்த்துதல் நுதலிற்று.
1. பொருள் வேற்றுமைப்படுக்கும்-பொருளால் வேறுபடுத்தும், 1. ஒருசாரன-வேற்றுமையுருபுகள். 2. இயற்பெயர்-வழங்குதற்காக மக்கட்கிடப்படும் பெயர். |