பக்கம் எண் :

370தொல்காப்பியம்-உரைவளம்

இ-ள் : இடைச்சொற்கள் எல்லாம் வேற்றுமைச் சொல்லாம், எ-று.

என்பது என் சொன்னவாறோவெனின், பெயரும், வினையும் போலப் பொருளை நேர்காட்டாது, ஐ, ஒடு, கு, இன், அது, கண் என்னும் வேற்றுமையுருபுபோல, வேறு பட்ட பொருளைக் குறித்து நிற்றலின், இடைச்சொல்லும் பொருள் வேறுபடுக்குஞ் சொல் எனப்படும்; பொருள் உணர்த்துஞ் சொல் எனப்படா. மன் என்பது கழிவினும், ஆக்கத்தினும், ஒழியிசையினும் வந்த வழித் தான் இடைப் பெற்று நிலை மொழியின் வேறுபட்ட பொருளைக் குறித்து நின்றதல்லது 3அப் பொருட்கு வாசகமன்றி நின்றமை கண்டு கொள்க. பிறவுமன்ன.

நச்

இது விசேடிக்குஞ்சொல் இவ்வாறு நிற்கும் என்கின்றது.

இ-ள் : வேற்றுமைச்சொல் எல்லாம்-முடிக்கும் சொல்லை விசேடித்து நிற்கும் சொற்கள் எல்லாம், இடைச்சொல்-முடிக்கப்படும் சொற்கும் முடிக்கும் சொற்கும் நடுவே வரும் சொல்லாய் நிற்கும், எ-று.

வேற்றுமைச் சொல் ‘வேறுபாட்டினைச் செய்யும் சொல்’ என விரியும். எழுவாயை முடிக்கும், பயனிலைக்கும், முற்றை முடிக்கும் பெயரிற்கும், வினையெச்சத்தை முடிக்கும் வினைக்கும் பெயரெச்சங்களை முடிக்கும் பெயர்கட்கும் இடையே வருதலின் இடைச்சொல் என்றார்.

உ-ம் : 1“கண்ணி கார்நறுங் கொன்றை
 .....................................................

3. அப்பொருட்கு வாசகமன்றி நின்றமை-மன் என்பது கழிவு ஆக்கம் முதலிய பொருட்கு உரிய வாசகம் (சொல்) அல்லாமல், தான் வரும் இடத்தில் அப்பொருட்கருத்தைத் தருமாறு நிற்றல்.

1. பொருள் : கரிய நறுமணமுள்ள கொன்றையே மாலை ................. வாகனம் தூயவெண்மையான காளையே.