இயைந்தன வரையார்” என்பதற்கு உரையாக, “இருசார் எழுத்திற்கும் ஒத்த வழக்கினான் வாராது சிதைந்து வந்தவையாயினும் பொருந்தி வந்தன. வரையப்படா வடசொல்லாதற்கு என்பது” என எழுதியதிலும், ‘சிதைந்து’ வருதலை தமிழில் உள்ள எழுத்து ஆரிய மொழியில் அதன் சிறப்பெழுத்தாகத் திரிந்து வருதலைக் கருதினார். தசம் (பத்து) எனும் வடசொல்லில் ‘ச’ எனும் தமிழ் எழுத்து ஆரியத்தில் ‘ஸ’ எனத் திரிந்து வந்தது என்பது இளம்பூரணர் கருத்து. ஆரியமும் திசைச் சொல்லில் அடங்குமாதலின் வடசொல் என்பதும் தமிழ்ச்சொல்லே எனக் கொண்டார் இளம்பூரணர். அவர் கருத்தே சிறப்புடையது. 396. | சிதைந்தன வரினு மியைந்தன வரையார் (6) | | | | (சிதைந்தன வரினும் இயைந்தன வரையார்) |
ஆ. மொ. இல. Even if they become deformed in usage to suit the Tamil phonetics, they are not excluded. இளம் இச்சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், இதுவும் வடசொற் கிளவியாமாறு உணர்த்துதல் நுதலிற்று. உரை : இருசார் எழுத்திற்கும் ஒத்த வழக்கினான் வாராது சிதைந்து வந்தனவாயினும் பொருந்தி வந்தன வரையப்படா வடசொல்லாதற்கு என்பது. 1அவை, ‘நிதியந் துஞ்சும்’ (அகம் 227) எனவும், ‘தசநான் கெய்திய பணைமருள் நோன்றாள்’ (நெடுநல் 115) எனவும் வரும்.
1. நிதி, தசம் என்பன ஆரியத்துக்கேயுரியன. ஆரியத்துக்கேயுரிய எழுத்துகளும் உடையன. |