பக்கம் எண் :

இடைச்சொல் வேற்றுமைச்சொல் சூ. 58373

பொருள் வேறுபாட்டினைக்குறித்து நின்றதல்லது, தானே அப்பொருளை உணர்த்தாமை கண்டு கொள்க.

ஆதி

இடைச்சொற்கள் எல்லாம் அவை சேர்ந்தவற்றின் பொருளை வேறுபடுத்தும் சொற்களாம்.

வீடு-பெயர்ச்சொல். ஐ இடைச்சொல் சேர்ந்து வீட்டை வாங்கினான், இடித்தான், அடைந்தான், விற்றான் எனப் பல பொருள் வேறுபடுத்தல் காண்க.

வீட்டுக்கு-கு-போனான் என்று குறிக்கிறது. வீடும்-உம்-வீடும் கோட்டமும் இவ்வாறு எல்லாம் இடைச்சொற்களும் வெவ்வேறு பொருள் கற்பிப்பனவாம்.

உரிச்சொல் வேற்றுமைச்சொல்

449. உரிச்சொன் மருங்கினும் முரியவை யுரிய      (59)
  
 (உரிச்சொல் மருங்கினும் உரியவை உரிய)

ஆ. மொ. இல.

In the group of sementemes also, there are some
which serve as differentiating words.

பி. இ. நூ.

இ. வி. 360

முத்து. ஒ. 121
 தொல் சூத்திரமே.

இளம்

இச்சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், உரிச்சொற்கள் திறத்துப் படுவதோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று

உரை : இடைச்சொல் எல்லாம் வேற்றுமைச்சொல்லாதற்கு எவ்வாறு உரியவாயினமன், அவ்வுரிமை உரிச்சொற்கண்ணும் எய்தும், எ-று.